Onetamil News Logo

பஞ்சர் கடை உரிமையாளர் கொடூர கொலை வழக்கில் 1 மணி நேரத்தில் கொலையாளி கைது 

Onetamil News
 

பஞ்சர் கடை உரிமையாளர் கொடூர கொலை வழக்கில் 1 மணி நேரத்தில் கொலையாளி கைது   


தூத்துக்குடியில் பஞ்சர் கடை உரிமையாளர் கொடூர கொலை வழக்கில் 1 மணி நேரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். 
      தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வேலன் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராம் மகன் கருப்பசாமி (47). இவருக்கு திருமணமாகி சங்கரி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இன்று அதிகாலை திருச்செந்தூர் சாலையில் உள்ள அவரது கடையில் ரத்தவெள்ளத்தில் மர்மமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
        போலீஸ் விசாரணையில் தொழில் காரணமாக இவரது கடைக்கு எதிர்புறத்தில் பஞ்சர் கடை நடத்தி வந்த தூத்துக்குடி பாளை ரோடு 3வது மைல் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் செல்லகுட்டி என்ற குட்டி (27) என்பவர் கருப்பசாமியை கொலை செய்தது தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட கருப்பசாமி பஞ்சர் பார்ப்பதற்கு குறைவான பணம் வாங்கியதால், தனக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டதால் அவரை கொலை செய்ததாக செல்லகுட்டி  வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொலையாளியை விரைந்து கைது செய்த போலீசாரை எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo