Onetamil News Logo

பசுவந்தனை ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார்.

Onetamil News
 

பசுவந்தனை ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார்.


தூத்துக்குடி 2020 அக்டோபர் 31 ;தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் பசுவந்தனை ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ , துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் பசுவந்தனை ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு பசுவந்தனை ஊராட்சியில் 1,367 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு  வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார் ; 
பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து கிராம பகுதிகளிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மூன்று ஆண்டுகளில் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட உள்ளது.  இந்த ஆண்டில் 976 குக்கிராமங்களில் உள்ள 1,67,356 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  இன்று ஓட்டப்பிடாரம் ஒன்றியம் பசுவந்தனை ஊராட்சியில் 967 வீடுகளுக்கு ரூ.48.76 லட்சம் மதிப்பிலும், பசுவந்தனை அலிபச்சேரி கிராமத்தில் 400 வீடுகளுக்கு ரூ.21.03 லட்சம் மதிப்பிலும்  குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  மேலும் பசுவந்தனையில் 14வது மத்திய நிதிக்குழு நிதி ரூ.12.75 லட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  புரட்சித்தலைவி அம்மாவின் அரசு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை என்னென்ன தேவை என்பதை அறிந்து அவை அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது என தெரிவித்தார்.
                    நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா,அஇஅதிமுக வடக்கு மாவட்ட பொருளாளர் தூத்துக்குடி தொழிலதிபர் M.R.S.ஆரோன் மோசஸ், அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் சவரிமங்கலம் ஆர்.முத்துசாமி ,மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி கே.ஜெயக்குமார்,தொழிலதிபர் சுதன்,வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் வக்கீல் ஸ்ரீனிவாசன் ,                                          வட்டார வளர்ச்சி அலுவலர் கெலன் வளர்மதி, மற்றும் முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo