Onetamil News Logo

தூத்துக்குடி அருகே  காயல்பட்டணம் அரசு மருத்துவமனையில்  இரத்த தட்டணுக்கள் எண்ணும் கருவி பயன்பாட்டினை, அமைச்சர்கள் துவக்கி வைத்தார்கள். 

Onetamil News
 

தூத்துக்குடி அருகே  காயல்பட்டணம் அரசு மருத்துவமனையில்  இரத்த தட்டணுக்கள் எண்ணும் கருவி பயன்பாட்டினை, அமைச்சர்கள் துவக்கி வைத்தார்கள்  


                   
தூத்துக்குடி அக்டோபர் 12 ;  தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணம் அரசு மருத்துவமனையில், இரத்த தட்டணுக்கள் எண்ணும் கருவி பயன்பாடு துவக்க விழா மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மூ.வீரப்பன்  தலைமையில்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ ,  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் , ஆகியோர் இன்று துவக்கி வைத்து பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்கள். 
விழாவில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்ததாவது..
முன்னாள் தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களால் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தையும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொது சுகாதாரத்துறையின் மூலம் மகப்பேறு உதவித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டம், அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம், சிறப்பு மருத்துவ முகாம்கள் என பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 24 இரத்த தட்டணுக்கள் எண்ணும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு இரத்த தட்டணுக்கள் எண்ணும் கருவியின் மதிப்பு ரூ.2.51 லட்சம் ஆகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் பருவ மழைக்காலங்களின் போது ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துவதற்கும், குறிப்பாக டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏ.டி.ஸ். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிப்பதற்கும் வாரம் தோறும், ஒவ்வொரு வியாழக்கிழமையும், டெங்கு தடுப்பு தினம் என அனுசரித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவரபடுத்தப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் சுகாதாரத்தை ஏற்படுத்திட பொதுமக்கள், அரசு அலுவலர்கள் இணைந்து, சுகாதாரப் பணிகள் முழு வீச்சுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தாமதமின்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில், உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு காலையும், மாலையும் இரத்த தட்டணுக்கள் எண்ணும் கருவியின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியப்பட்டு, அதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எவ்வித அச்சப்பட வேண்டாம். மேலும், காயல்பட்டிணம் அரசு மருத்துவமனை, தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனையாக செயல்பட வேண்டும் என இப்பகுதி மக்களின் கோரிக்கையை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சீறாப்புராணம் இயற்றிய அமுதகவி உமறுப்புலவர் அவர்களை சிறப்பிக்குமாறு இந்த பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் அளித்த கோரிக்கையை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நீங்கள் அளித்த கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி முதல், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அமுதகவி உமறுப்புலவர் அவர்களை சிறப்பிக்கும் வகையில் விழா நடத்தப்படும் என்ற நல்ல செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன். - என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்தார்கள். 
     விழாவில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி,எம்.பி., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கணேஷ்குமார், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கீதாராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo