Onetamil News Logo

போலிசார் குடியிருப்பு 5-3/4 கோடியில் கட்டப்பட்டு 3 மாதங்கள் கடந்தும் இன்னும் தூத்துக்குடியில் திறக்கப்படவில்லை,உடைந்து போவதற்குள் திறக்கப்படுமா?  தமிழன்டா ஜெகஜீவன் கேள்வி? 

Onetamil News
 

போலிசார் குடியிருப்பு 5-3/4 கோடியில் கட்டப்பட்டு 3 மாதங்கள் கடந்தும் இன்னும் தூத்துக்குடியில் திறக்கப்படவில்லை,உடைந்து போவதற்குள் திறக்கப்படுமா?  தமிழன்டா ஜெகஜீவன் கேள்வி? 


தூத்துக்குடி 2021 ஜூலை 25 ; போலிசார் குடியிருப்பு 5-3/4 கோடியில் கட்டப்பட்டு 3 மாதங்கள் கடந்தும் இன்னும் திறக்கப்படவில்லை,உடைந்து போவதற்குள் திறக்கப்படுமா? போலிசார் கேள்வி கேட்டுவருகின்றனர். 
இதுகுறித்து தமிழன்டா ஜெகஜீவன் கூறியதாவது... வெள்ளைக்காரன் கட்டிய கட்டிடங்கள் இன்னும் 100 ஆண்டுகளைக் கடந்து நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வல்லநாடு பழைய மேம்பாலம்,தூத்துக்குடி சப்-கலெக்டர் ஆபீஸ் போன்றவை நிற்கிறது.ஆனால் சுதந்திரத்திற்குப்பின்னர் கட்டப்படும் கட்டிடங்கள் நாட்களை எண்ணவேண்டியுள்ளது. வல்லநாடு மேம்பாலம் போல் என்று கூறினார். மேலும்  தூத்துக்குடி பிரையண்ட் நகரில் மூன்று ஆய்வாளர்கள், 9 உதவி ஆய்வாளர்கள், 23 போலீசார் வசிக்கக்கூடிய குடியிருப்பு கட்டப்பட்டு சாவி வழங்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் இன்றுவரை அந்த குடியிருப்பு வளாகம் திறக்கப்படாமல் இருப்பது ஏன் என்று தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் திருநெல்வேலி கோட்டம் ஏன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை,இந்த கட்டிடம் 5 கோடியே 64 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கு கட்டப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கட்டிடத்தை சென்னை யூனிக் அசோசியேட் கட்டியுள்ளது. எத்தனை ஆண்டுகள் இந்த கட்டிடம் நிலைத்து நிற்கும்? 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo