பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடும் ஒரு வக்கீல் தான் படத்தின் கதாநாயகன், விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் விதி எண் 3.
தூத்துக்குடி 2022 ஜூலை 29 ;பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடும் ஒரு வக்கீல் தான் படத்தின் கதாநாயகன், விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் விதி எண் 3. இத் திரைப்படத்தின் இயக்குனர் பிராட்வே சுந்தர் ஏற்கனவே அரசியல் சதுரங்கம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்., விதி எண் 3 இவரது 2-வது படைப்பாகும்., விறுவிறுப்பான கதைகளும் சண்டை காட்சிகள் திகில் நிறைந்த வில்லன் காட்சிகள் என உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இத்திரைப்படத்தில் ஜெப சிங் கதாநாயகனாக (வக்கீல் )நடித்துள்ளார்.. மேலும் வக்கீல் செங்குட்டுவன்,டி முருகன்,அக்ஷயா,ரம்யா,கிருஷ்ணா சுமங்கலி,சதீஷ்,பால சங்கர் என அநேகர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் தூத்துக்குடியை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தில் கார்த்திக் இணை இயக்குனராகவும்,ஜித்து,கார்த்திக் கௌதம்,மற்றும் ரஹ்மத் சாஹிப் ஆகியோர் உதவி இயக்குனர்களாகவும் பணிபுரிந்துள்ளனர், டப்பிங் பணிகளை தூத்துக்குடி சீலன் ஸ்ருதி செய்திருக்கிறார். ஜாண் சுரேன் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.