Onetamil News Logo

தூத்துக்குடி கடற்கரையில் கரை ஒதுங்கிய அரிய வகை  அம்மினி உளுவை  மீன் - இறக்கைகள் மருத்துவகுணம் கொண்டது என்பதனால் பாதுகாப்பு

Onetamil News
 

தூத்துக்குடி கடற்கரையில் கரை ஒதுங்கிய அரிய வகை  அம்மினி உளுவை  மீன் - இறக்கைகள் மருத்துவகுணம் கொண்டது என்பதனால் பாதுகாப்பு    


                                   
தூத்துக்குடி ஆகஸ்ட் 24 ;      
தூத்துக்குடியில் பழைய துறைமுகம் கடற்கறையில்  இறந்த நிலையில் அரிய வகை அம்மினி உளுவை  மீன் கரை ஒதுங்கியதால்  பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே கடற்கரையின் வடக்கு பகுதியில் பெரிய மீன்  ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் அங்கு சென்று சோதனையிட்ட போது அரிய வகை அம்மினி உளுவை  மீன்   இறந்த நிலையில் கரை ஒதுக்கியிருப்பதை கண்ட அவர்கள் அதை கைப்பற்றி ஆய்வு  செய்தனர். இந்த மீன் இறக்கைகள் மருத்துவகுணம் கொண்டது என்பதால் அவற்றை யாராவது வெட்டி கடத்தி கொண்டு போய்  விடுவர் என்பதனால் இரவு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.                                                   
அந்த மீனின் நீளம்  4மீ , 1½ டன் எடையும் கொண்டது  ,  இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர், இறந்த அரிய வகை அம்மினி உளுவை  மீன் உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது.கப்பலில் அடிப்பட்டு கரை ஒதுங்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo