Onetamil News Logo

தந்தையை வெட்டிக்கொள்ள முயன்ற மகன்,அவரிடம் அரிவாளை புடுங்கி மகனையே வெட்டிக்கொன்றார் தந்தை 

Onetamil News
 

தந்தையை வெட்டிக்கொள்ள முயன்ற மகன்,அவரிடம் அரிவாளை புடுங்கி மகனையே வெட்டிக்கொன்றார் தந்தை 


தூத்துக்குடி 2022 ஜூன் 21 ;தந்தையை வெட்டிக்கொள்ள முயன்ற மகன்,அவரிடம் அரிவாளை புடுங்கி மகனையே வெட்டிக்கொன்றார்                       தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கவர்னகிரி, சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அழகன் (52). இவரது மகன் காசிராஜன் (35), லாரி டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி குடும்ப பிரச்சனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், காசி ராஜனுக்கும் அவரது தந்தைக்கும் இடையே சொத்துப் பிரச்னை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
              தந்தை தமிழ் அழகன் மீது காசிராஜன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஆஜராவதற்காக இன்று தமிழழகன் தனது உறவினர்கள் ஓட்டப்பிடாரம் சுந்தரலிங்க நகரை சேர்ந்த கடல்ராஜா (45), தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த காசிதுரை (31) ஆகியோருடன் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வந்தார். தமிழழகன் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர், காரில் ஏற முயன்றபோது, அங்கு வந்த காசிராஜன், தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் தந்தை தமிழழகன், கடல்ராஜா, காசிதுரை ஆகிய 3 பேரையும் தாக்கினார். 
                            இதில் 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட 3 பேரும் காசிராஜன் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி அவரை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த காசிராஜன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், காசிராஜன் வெட்டியதில் காயமடைந்த 3பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
             இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், ஏஎஸ்பி சந்தீஸ், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்ததாக தந்தை தமிழழகன், உறவினர்கள் கடல்ராஜா, காசிதுரை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நீதிமன்றம் அருகே நடந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo