Onetamil News Logo

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி,உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!!

Onetamil News
 

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி,உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!!


கர்நாடகம் 2021 அக்டோபர் 31 ;பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
              கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் நேற்றுமுன்தினம்  மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 46. மறைந்த கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளையமகன்னான் இவர்  மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
                    கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பெங்களூருவில் வசித்து வந்த அவர், காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.                          
                  பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். சென்னையில் பிறந்தவர் இவர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த புனித், ’பெட்டாடா ஹூவு’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார். பின்னர் புரி ஜெகநாத் இயக்கிய ’அப்பு’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் தமிழில் ‘தம்’ என்ற பெயரில் சிம்பு நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.குறுகிய காலத்திலேயே தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற புனித் ராஜ்குமார், இப்போது ‘ஜேம்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படமும் அவர் நடித்துள்ள த்வித்வா என்ற படமும்ம் விரைவில் வெளியாக இருக்கிறது.இந்நிலையில், இன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, புனித் ராஜ்குமாருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் உடனடியாகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 46. நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான், சோனு சூட், சாந்தனு, மனோபாலா, பிரியா ஆனந்த், தனஞ்செயன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.                                    புனித் ராஜ்குமாரின் மகள் அமெரிக்காவில் படித்து வந்ததால், அவர் வருகைக்காக காத்திருந்த நிலையில் நேற்றிரவு , பெங்களூர் வந்தடைந்த அவர் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் பெங்களூருவில்  கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் காலையிலேயே தொடங்கியது; கன்டீரவா ஸ்டூடியோ அருகே தந்தை உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட ஏற்பாடுகள் நடந்தன. புனித்ராஜ்குமாரின் இறுதி சடங்கிற்கு  நேரில் வருகை புரிந்த  கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அஞ்சலி செலுத்தியதுடன்,   அவரது நெற்றியில் முத்தமிட்டார். இதை தொடர்ந்து காலை 7.30 மணியளவில்  கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.        
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo