Onetamil News Logo

வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்திற்குள் கவர்னர் ரவி உடன் இணக்கத்தை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முயற்சி 

Onetamil News
 

வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்திற்குள் கவர்னர் ரவி உடன் இணக்கத்தை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முயற்சி 


வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்திற்குள் கவர்னர் உடன் இணக்கத்தை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகிறது மேலும் பிரிவினைவாத கொள்கைகளுக்கு எதிராக கவர்னர் ரவி தொடர்ந்து பேசி வந்ததால் மேலும் திராவிட இனம் என்பதுதான் திமுகவின் அடிப்படை கொள்கை ஆனால் திராவிடம் என்பது இனம் அல்ல இடம் என கவர்னர் பேசி வருவது ஆளும் திமுகவினரை கோபமடைய செய்தது பொது நிகழ்ச்சிகளை திமுகவின் அடிப்படை கொள்கையை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் கவர்னர் பேசி வருகிறார். இந்த நிலையில் ஜனவரி 9ம் தேதி சட்டசபையில் உரையாற்றும்போது மாநில அரசு தயாரித்துச் சென்ற உரையில் சில பத்திகளை அவர் தவிர்த்து உள்ளார் அதிர்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின் மாநில அரசு தயாரித்த உரை மட்டுமே சட்டசபை குறிப்பில் இருக்கும் என தீர்மானம் கொண்டு வந்த போது கோபத்தில் கவர்னர் வெளி நடப்பு செய்தார். இது கவர்னருக்கும் திமுக அரசுக்கும் இடையேயான மோதலை வெளிச்சம் போட்டு வெளியே காட்டியது அதைத் தொடர்ந்து 14 ஆம் தேதி திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக கவர்னரை உரிமையில் விமர்சித்து இருக்கிறார். அதே நேரத்தில் கவர்னரை தரக் குறைவாக விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று கவர்னர் தேசிய கொடியேற்ற வேண்டும் இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளும் தேசிய கொடியேற்ற வரும் கவர்னரை முதல்வர் வரவேற்பது மரபாக இருக்கின்றது இந்த விழாவில் தான் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் காந்தியடிகள் காவலர் வதக்கம் திருத்திய நெல் சாகுபடிக்கான வேளாண் துறை சிறப்பு பதக்கம் கோட்டை அமீர் விருது ஆகியவற்றை தமிழக கவர்னர் வழங்குவார் எனவே கவர்னர் தமிழக அரசு இடையே எனக்குமற்ற போக்கு நீடித்தால் குடியரசு தின விழாவிலும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இரு தரப்பும் உருவாகும் என்பது சூழ்நிலைகள் தெரிவிக்கிறது குடியரசு தினத்திற்குள் இணக்கமான சூழலை உருவாக்க அரசு முயற்சித்து வருவதாகவும் அதை கவர்னர் தரப்பும் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது கவர்னர் உண்டான மோதல் அரசு நிர்வாகத்தை முடக்கிவிடும் என சில மூத்த ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் முதலமைச்சரிடம் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இருதரப்பிலும் இணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இரண்டு நாட்கள் பயணமாக 13ஆம் தேதி கவர்னர் ரவி டெல்லி சென்றார் இது தனிப்பட்ட பயணம் என்றாலும் பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் சட்டசபையில் நடந்த சர்ச்சை உள்ளிட்ட தமிழ்நாட்டு நிலவரங்கள் குறித்த அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo