சாதாரண நாட்களில் அதிக கட்டணம் வசூலித்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
சாதாரண நாட்களில் அதிக கட்டணம் வசூலித்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடியைச் சார்ந்த எம்பவர் சங்கர் என்பவர் கடந்த 23.12.2019, திங்கட்கிழமை அன்று ளுநுவுஊ சென்னை டு மார்த்தாண்டம் குளிர் சாதனப் பேருந்து வண்டி எண் வுN 01 யுN 2458 என்ற பேருந்தில் காலை 8 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணம் செய்தார். இதற்கு கட்டணமாக டிக்கெட் எண் 82723ன்படி ரூ 100 , டிக்கெட் எண் 55829ன்படி 10 ரூபாய், ஆக மொத்தம் ரூபாய் 110 செலுத்தியுள்ளார்.
வழக்கமாக இந்த பேருந்தில் பயணக் கட்டணமாக ரூபாய் 90 தான் வசூலிக்கப்படும். இப்படி ஏன் ரூபாய் 20 அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றீர்கள் என மேற்குறிப்பிட்ட பேருந்தின் நடத்துனரிடம் கேட்டதற்கு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து இப்பேருந்து புறப்பட்டுள்ளதால் கட்டணம் அதிகம் எனக் கூறினார். ஆனால் அவர் பயணம் செய்தது திங்கட்கிழமை காலையில்தான்.
மேலும் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் வெள்ளி முதல் ஞாயிறு வரை கூடுதல் கட்டணமும், திங்கள் முதல் வியாழன் வரை சாதாரண கட்டணமும் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். இவ்வாறு அதிகமாக பெறப்பட்ட ரூபாய் 20 கட்டணத்தை திரும்ப தருமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான எம்பவர் சங்கர் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கிளாஸ்டன் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூபாய் 10,000 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.