தூத்துக்குடி மாப்பிளையூரணியில் இளம் பெண்ணை தாக்கி 10 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற வாலிபரை சிசிடிவி கேமரா காட்சிகளைக்கொண்டு போலீஸ் வலைவீச்சு,மாப்பிளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் நேரில் களத்தில் இறங்கினார்.
தூத்துக்குடி மாப்பிளையூரணியில் மாலைப்பொழுதில் இளம் பெண்ணை தாக்கி 10 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற வாலிபரை சிசிடிவி கேமரா காட்சிகளைக்கொண்டு போலீஸார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாப்பிளையூரணி பகுதியைச் சேர்ந்தவர் மாப்பிள்ளையூரணி பிள்ளையார் கோவில் தெரு ராஜேந்திரன் மகள் சாரதா (40),இவர் அவரது 2வயது குழந்தைக்கு சாலையில் நின்று சோறு ஊட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தார். அப்போது மாஸ்க்,தொப்பி அணிந்து,பச்சை சட்டை போட்டு பேண்ட் அணிந்து வந்து கிறித்தவ கோவிலில் இருந்து மற்றொரு இளம் பெண்ணை பின்தொடர்ந்து வந்துள்ளது. தெரியவருகிறது.அப்பொழுது அந்தப்பெண் வீட்டுக்குள் போனதைப்பார்த்தவுடன்,அவனது கவனம் சாரதா என்ற இளம்பெண்ணை பார்த்தவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க செயினை அடித்து,உதைத்து,மிதித்து பறித்துச் சென்றதாகத் தெரிகிறது.தகவல் அறிந்து உடனே வந்த மாப்பிளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் அதிரடியாக களத்தில் இறங்கி துரிதமாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்த தாளம்முத்து நகர் காவல் உதவி ஆய்வாளர் முனியசாமிக்கு தகவல் அளித்து விசாரணைக்களத்தில் வேகப்படுத்தினார்.
முதற்கட்டமாக, வழிப்பறிச் சம்பவம் நடைபெற்ற மாப்பிளையூரணி பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வுசெய்தனர்.