Onetamil News Logo

பேருந்து இல்லை ,லாக் டவுண் ;1500 கி.மீ தூரம் பயணித்து மகனை அழைத்து வந்த தாய் ;உதவிய தெலுங்கானா, ஆந்திரா காவல்துறைக்கு நன்றி

Onetamil News
 

பேருந்து இல்லை ,லாக் டவுண் ;1500 கி.மீ தூரம் பயணித்து மகனை அழைத்து வந்த தாய் ;உதவிய தெலுங்கானா, ஆந்திரா காவல்துறைக்கு நன்றி


 தெலுங்கானா 2020 ஏப்ரல் 10 ;தெலுங்கானா மாநிலத்தில்  நிஜாமாபாத் மாவட்டத்தில் இருக்கிறது ‘போதான்’ என்னும் சிறுநகரம். அங்கிருந்து தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்ப்பதற்காக நெல்லூர் சென்றிருக்கிறான் 19 வயதான நிஜாமுதின். சரியாக அந்த நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறான். தெரிந்தவர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. 
வேறு வழி தெரியாமல் போகவே, அவனது விதவைத் தாய் ரசியா சுல்தானா தவித்திருக்கிறார். அரசுப்பள்ளியின் தலைமையாசிரியை அவர்.  காவல்துறையை அணுகி நெல்லூர் செல்ல பாஸ் வாங்க முயற்சித்து இருக்கிறார். வழங்கப்படவில்லை. எனவே காரில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. 
ஆனால் இந்த காரணம் தெரிவித்து ஒரு கடிதம் காவல்துறையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு தனது ஸ்கூட்டியில், சில ரொட்டிகளை சுட்டு வைத்துக்கொண்டு, ஐந்து லிட்டர் பெட்ரோலுடன் 750 கி.மீ தொலைவில் உள்ள நெல்லூருக்குத் ஏப்ரல் 6ம் தேதி தனியாக கிளம்பி இருக்கிறார். 
கூகிள் மேப்பின் உதவியோடு வழிகளை அறிந்திருக்கிறார். அங்கங்கு காவல்துறையின் கடும் சோதனைகள், பேச்சுக்கள் எல்லாவற்றையும் தாங்கி, அவர்களுக்கு விளக்கி பயணித்தை தொடர்ந்திருக்கிறார். ஊரடங்கிய நகரங்களை, இரு பக்கமும் வனங்களாக காட்சியளித்த யாருமற்ற நீண்ட சாலைகளைக் கடந்திருக்கிறார்.
ஏப்ரல் 7 ம் தேதி அதிகாலை 2 மணிக்கு மகனை சந்தித்து இருக்கிறார். சில மணி நேரங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு திரும்பவும் போதானுக்கு புறப்பட்டு இருக்கிரார். ஏறத்தாழ 1500 கி.மீ தூரம் பயணித்த அவரை ஊரே ஆச்சரியத்தில் கொண்டாடி இருக்கிறது. தனது மகனை அழைத்து வருவதற்கு உதவிய தெலுங்கானா, ஆந்திரா காவல்துறைக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.
இந்த செய்தியை படிக்கும்போது, குழந்தைகளுக்காக எதையும் எதிர்கொள்ள சித்தமாகும் தாயின் பேரன்பு தெரிகிறது. நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் தீரம் புலப்படுகிறது. 
இணையத்தில், இந்த செய்திக்கு கீழே வந்திருக்கும் கருத்துக்கள் விபரீதமாக இருக்கின்றன.
“ஊரடங்கை எப்படி மீறுவது என்று இந்த பெண்ணுக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸை எப்படி சமாளிப்பது என்றும் தெரிந்திருக்கிறது. யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்.”
“நாடெங்கும் இதுபோல் பலர் குடும்பத்திலிருந்து எங்கோ இருக்கிறார்கள். வைரஸ் பரவாமல் இருக்க விலகி இருக்கிறார்கள். இதுபோல மதத்தைச் சார்ந்த சிலர் தங்கள் சுயநலன்களுக்காக ஊரடங்கின் விதிகளை உடைக்கிறார்கள்”
“ஏன் எப்போதும் முஸ்லீம்களே  விசேஷமானவர்களாக, பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்”
“ஓரு சமூகம் இப்படித்தான் லாக்-டவுணை கிண்டல் செய்கிறது. பெருமைக்குரிய இந்தியர்கள் நீங்கள் இதனை போற்றுகிறீர்கள். நிலைமையின் தீவீரத்தை உணர்கிறீர்களா?”
“முறையாக பரிசோதிக்க வேண்டும். இதன் உள்நோக்கம் வெறொன்றாகவும் இருக்கக் கூடும். தீவீரவாதிகளுக்கு உதவி செய்யும் பெண்ணாக இவர் இருக்க மாட்டார் என நான் நம்புகிறேன்….”
“இதனையே ஒரு இந்து செய்திருந்தால், லாக் டவுண் விதிகளை மீறும் செயல் என இந்த ஊடகங்கள்  சொல்லி இருக்கும்.”
இப்படியே நீள்கின்றன.
சக மனிதர் மீது காட்டும் அன்புக்கும், அவர்கள் வேதனையிலும் சந்தோஷத்திலும் பங்கு கொள்கிற அழகுக்கும் என்னவாயிற்று? வெறுப்பும், இந்துத்துவாவின் மனநிலையும் பரவிய ஒரு பெரும்பான்மை சமூகம் தன் மனசாட்சியை இழந்து வருகிறது.
ரசியா சுல்தானாவை தாயாக, தீரப்பெண்ணாக நேசிக்கிறவர்களே மனிதர்கள். அதுவே உண்மையான இந்திய மனமும் ஆகும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo