Onetamil News Logo

பெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை ;பரபரப்பு நடந்தது என்ன?

Onetamil News
 

பெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை ;பரபரப்பு நடந்தது என்ன?


தெலுங்கானா 2019 நவம்பர் 4 ;பட்டப்பகலில் பெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
தெலுங்கானாவில் பட்டப்பகலில் பெண் தாசில்தார் ஒருவர் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுரமேட்  தாசில்தாராக பணியாற்றி வந்தவர் எம்மாராவ் விஜயா ரெட்டி. இன்று பட்டப்பகலில் அவரின் அலுவலக அறைக்குள் நுழைந்த ஒரு கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் அந்த கும்பல்  விஜயா ரெட்டியை தீவைத்து எரித்து கொலை செய்து விட்டு ஓடி விட்டது.
இந்த சம்பவம் குறித்த முழு விவரங்களையும் வழங்குமாறு முதலமைச்சர் அலுவலகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு வருவாய் மற்றும் தாசில்தார் ஊழியர் சங்கம் கடும்  கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சரும், டிஜிபியும் கூட்டாக விசாரித்து அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஜிஸ்திரேட் பதவியில் இருக்கும் தாசில்தாரை அலுவலகத்திற்குள் எரிப்பது குறித்து அரசு ஊழியர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo