Onetamil News Logo

மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களை 10 நாள் கடந்து என் கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.  

Onetamil News
 

மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களை 10 நாள் கடந்து என் கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.  


ஹைதராபாத், 2019 டிசம்பர் 8 ;பெண் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற சம்பவம் ஹைதராபாத்தில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.4 பேரை கைது செய்த போலீசார் அவர்களை 10 நாள் கடந்து என் கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். 
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி. ஷாம்ஷாபாத் பகுதியில் வசித்துவந்தார். இவர் ஒரு கால்நடை டாக்டர். கொல்லப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தவர்.தினமும் ஆஸ்பத்திரிக்கு வீட்டிலிருந்து டூவீலரில்தான் சென்று வருவார். நேற்று இரவும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் பிரியங்கா. அப்போது திடீரென டூவீலர் பஞ்சர் ஆகி உள்ளது. நடுரோட்டிலேயே என்ன செய்வதென்று பிரியங்கா விழித்து நிற்க, அங்கிருந்த ஒரு லாரி டிரைவர் பிரியங்காவிற்கு உதவி செய்ய முன்வந்தார். உடனே தன் வீட்டுக்கும் வண்டி ரிப்பேர் ஆகிவிட்டதை பிரியங்கா சொல்லி உள்ளார். தன் தங்கையிடம் பேசும்போது "பைக் பஞ்சர் ஆயிடுச்சு... எனக்கு பயமா இருக்கு.. நான் டோல்கேட் பக்கமா தான் நிக்கிறேன்.. என்கிட்டே கொஞ்ச நேரம் நீ பேசிட்டே இரு' என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் சிறிது நேரத்தில் பிரியங்காவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது.. வீட்டில் இருந்தவர்கள் இதனால் பதறி போய், சம்பவ இடத்துக்கு ஓடிவந்தனர். ஆனால், அங்கு பிரியாங்காவை காணவில்லை.. கலக்கம் அதிகமாகிய அவர்கள், உடனடியாக போலீசில் சென்று இதுகுறித்து புகார் தந்தனர்.
இதையடுத்து போலீசார் பிரியங்காவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, ஹைதராபாத் - பெங்களூர் ஹைவே பகுதியில் ஷாத்நகர் பாலத்துக்கு அடியில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை பிரியங்காவின் பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு, பாலத்துக்கு அடித்தை மீட்க விரைந்தனர். யூகித்தபடியே அது பிரியங்காவின் சடலம்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
பின்னர், இது சம்பந்தமான விசாரணையில், அடையாளம் தெரியாத சிலர் காரில் இந்தப் பகுதிக்கு பிரியங்காவை கடத்தி வந்து பலாத்காரம் செய்து பின்னர் எரித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் எதுவாக இருந்தாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்தான் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
நவம்பர் 27ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் சுங்கச்சாவடி அருகே கால்நடை பெண் மருத்துவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை எனவும் இதுவரை ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தனர்.
மேலும், டெல்லியில் இருந்து திரும்பிய தெலுங்கானா முதலமைச்சர் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் எனவும், ஆனால் பெண் மருத்துவர் மரணத்தை கண்டுகொள்ளவில்லை எனவும் தெலங்கானா எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னுடைய மகனிடம் கே டி ராமா ராவ் போலீசுடன் இணைந்து பணியாற்ற உத்தரவிட்டு இருந்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது இந்த குற்றம் வெளியே தெரிந்த அன்று அது குறித்து தீவிரமாக விசாரணை நடத்துவோம் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டு இருந்தார். அது மட்டுமின்றி இந்த வழக்கை விசாரிக்க 10 தனிப்படை அமைத்தார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்பும் கே டி ராமா ராவ் கவனித்து வந்தார். போலீசுக்கு அவர் இது தொடர்பாக அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்.
இது தொடர்பாக கே டி ராமா ராவ் நேற்று முதல்வர் சந்திரசேகர ராவ் உடன் பேசினார். மக்கள் எல்லோரும் கோபமாக இருக்கிறார்கள். இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் முதல்வருக்கு அறிவுறுத்தி உள்ளார். அதன்பின்தான் இன்று என்கவுண்டர் நடந்துள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo