Onetamil News Logo

தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

Onetamil News
 

தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு குவியும் வாழ்த்துக்கள்


ஹைதராபாத் 2019 செப் 8: தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை தமிழக துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் தலைமையில் ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் ஹைதராபாத் வரை சென்று வழி அனுப்பி வைத்தனர். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அண்ணன்கள் தங்களது பாசனமான தங்கையை வழி அனுப்பி வைத்தது போன்று இருந்தது.
மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆணை பிறப்பித்தார்.
இதையடுத்து பாஜக தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்த தமிழிசை சவுந்திரராஜன் இன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்றார். அங்கு தமிழிசைக்கு பூங்கொடுத்து கொடுத்து தெலுங்கானா அம் மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வரவேற்றார்.
அப்பாவும் மகளும் சந்தித்த நொடி.. உணர்ச்சி வசப்பட்டு காலில் விழுந்த தமிழிசை.. உருக்கமான நிகழ்வு!
தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு ;
இதையடுத்து ஹைதராபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழிசை சவுந்திரராஜனுக்கு ஆளுநராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழிசையின் பதவி ஏற்பு விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தமிழகத்தில் இருந்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலு மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரான பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் தெலுங்கானா பாஜக முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
தமிழிசையுடன் வேலுமணி ;ஆளுநராக பதவி ஏற்ற பின்னர் நடந்த விருந்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் தமிழிசையுடன் பேசும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
குரல் கொடுத்தவர் தமிழிசை ; தெலுங்கானா ஆளுநராகியுள்ள தமிழிசை சௌந்திரராஜனை தமிழக அமைச்சர்கள் அனைவருக்குமே பிடிக்கும். தமிழிசை பாஜக தலைவராக இருந்த போது, தமிழக அரசுக்காக பலமுறை குரல் கொடுத்து இருக்கிறார். ஆளும்அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் வீசும் கடும் சொற்களுக்குள் அதிமுக தலைவர்களை விடவும் தமிழிசை அதிக அளவு பதிலடி கொடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுத்து வந்தார் தமிழிசை
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo