Onetamil News Logo

தென்மாவட்ட தென்காசியில் உருவாகும் இளைஞர்களின்  புரட்சிகர  அரசியல்

Onetamil News
 

தென்மாவட்ட தென்காசியில் உருவாகும் இளைஞர்களின்  புரட்சிகர  அரசியல்


தென்காசி 2021 பிப்ரவரி 21 ;.திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி இளைஞர்கள் படை எடுக்க காரணம் என்ன???
தமிழகத்தில் எத்தனையோ மாவட்டங்கள் இருந்தாலும் குறிப்பாக தென்மாவட்டங்களில் இளைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை இந்த அளவிற்கு ஆதரிக்கும் காரணம் என்ன???
 இளைஞர்களை இந்த அளவிற்கு அரசியலில் ஈடுபட ஆர்வத்தைத் தூண்டும் அந்த நபர் யார்?
இதன் பின்னணி என்ன??????? 👉வாருங்கள் பார்ப்போம்...👉
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலை பூர்வீகமாக வும் தலைநகரை தன்னிடமாக வைத்து தென் மாவட்ட இளைஞர்களின் அரசியலில் மாபெரும்  சக்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் "காசிராஜன்"
.. மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் இதுதான் ஆம்.!!!!
வழக்கறிஞர் காசிராஜன் அவர்களைப் பற்றி!!!!!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு ஆலங்குளம் எனும் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்தான் காசிராஜன் அவர்கள்.
தனது சிறுவயது முதலே போராட்ட குணம் கொண்ட காசிராஜன் அவர்கள்  தனது போராட்ட  வாழ்க்கையை கல்லூரியில் தொடங்கினார்...
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பைத் தொடர ஆரம்பித்தார்.. அப்பொழுது இருந்தே அவருடைய அரசியல் வாழ்க்கையும் தொடங்க ஆரம்பித்தது...ஆம்
சட்ட கல்லூரியில் மாணவராக இருக்கும் பொழுதே திமுக மாணவர் அணி அமைப்பாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்...
இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம்' சென்னை சட்டக்கல்லூரி இடமாற்ற போராட்டம், ஈழத்தமிழர் பிரச்சனை,, போன்ற பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார் ...
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓர் சிறந்த வழக்கறிஞராக தனது பணியை திறம்பட செய்துகொண்டிருக்கிறார்...
தற்போது தென்காசி வடக்கு மாவட்ட  திமுக மாணவர் அணி துணை அமைப்பாளராக இருக்கும் இவர் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்..
அவ்வாறு தலைமை கழகம் காசிராஜன் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு சிறந்த இளம் அரசியல் சாணக்கியர் உடன் சேர்ந்து அரசியல் பணியாற்ற அனைத்து இளைஞர்களும் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர்...
இதுவே தென் மாவட்ட இளைஞர்கள் திமுக வில் தன்னை இணைத்துக் கொள்ள முக்கிய காரணம்.. எந்தவித அரசியல் பின்புலமும்  இல்லாத குடும்பத்தில் பிறந்து  முதல் தலைமுறை அரசியல்வாதியாக தன்னைத்தானே உருவாக்கி இன்று அனைத்து இளைஞர்களிடமும் நன்மதிப்பைப் பெற்று புரட்சிகர அரசியல் செய்து கொண்டிருக்கிறார்...
காசிராஜன் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கடையநல்லூரில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாதவ வாக்குகள் அவருக்கு கை கொடுக்கும்..
மேலும் இவருக்கு  கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட தலைமைக்கழகம் வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் தொகுதியில் தங்கி களப்பணி ஆற்ற பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்..
கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு 
கேட்டுக்கொண்டிருக்கு வழக்கறிஞர் காசிராஜன் அவர்கள் தமிழகம் முழுவதும்  எவ்வளவு  இளைஞர்களை  வேண்டுமானாலும் களம் இறக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது...
இந்த இளம் தலைமுறையினருக்கு தலைமைக்கழகம் வாய்ப்பு கொடுக்குமா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்????
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo