Onetamil News Logo

தென்காசியை புதிய மாவட்டமாக மாநில அரசு அறிவித்ததற்கு மத்தியஅரசு ஒப்புதல்

Onetamil News
 

தென்காசியை புதிய மாவட்டமாக மாநில அரசு அறிவித்ததற்கு மத்தியஅரசு ஒப்புதல்


தென்காசி 2019 அக்டோபர் 24 ;தென்காசியை புதிய மாவட்டமாக மாநில அரசு அறிவித்ததற்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப்பேரவையில் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தாெடந்து புதிய மாவட்டம் தொடங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடம் தேர்வு செய்யும் பணி, மாவட்டஆட்சியர் மற்றும் ஆணையர் அறிவிப்பு,ஆகியவை நடைபெற்றது.
இந்நிலையில் தென்காசியை புதிய மாவட்டமாக தமிழகஅரசு அறிவித்ததற்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் தென்காசியில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார், சிவகிரி, வீரகேரளம்புதூர், ஆலங்குளம் என 6 தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் முதல் மாவட்ட ஆட்சியராக அருண்சுந்தர் தயாளன் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo