ஒண்ணுக்கு இருக்க வழியில்லை பால விநாயகர் கோவில் தெருவில் ஓராயிரம் கடைகள், கழிப்பறை கட்ட பணிகளை துவக்கிய போது ஆவுடையாபுரம் பொதுமக்கள் கழிப்பறை கட்ட எதிர்ப்பு
தூத்துக்குடி மாநகர் பகுதியில் பல இடங்களில் மாநகராட்சி சார்பில் புதியதாக கழிப்பறை கட்ட மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் பணிகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து பணிகளை செய்ய முன்வந்த அனுமதி அளித்த ஒப்பந்தக்காரர்கள் அந்தந்த பகுதியில் புதியதாக கழிப்பறை கட்ட பணிகள் துவக்கி வருகின்றனர்.
14.3.2023 கழிப்பறை கட்ட தனிநபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார் அதன் அடிப்படையில் அங்கு சென்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி மேயர் அலுவலர்களுடன் ஆலோசனை செய்து இடத்தை அளக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணிகள் உடனடியாக துவக்கப்பட்டது.
இந்த நிலையில் புதன்கிழமை பால விநாயகர் கோவில் தெருவில் கழிப்பறை கட்ட பணிகளை துவக்கிய போது ஆவுடையாபுரம் பொதுமக்கள் இங்கு கழிப்பறை கட்டக்கூடாது அருகில் நாங்கள் வழிபடும் கோவில் உள்ளது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறி பணிகளை துவக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை அடுத்து மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர், அதன்பின்பு சம்பவ இடத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த உமரி சத்தியசீலன் முன்னாள் கவுன்சிலர் லதா வழக்கறிஞர்கள் வாரியார், சின்னத்தம்பி மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளை நிறுவனர் இசக்கி ராஜா உள்ளிட்டோர் அப்பகுதி மக்களுடன் ஆலோசனை செய்தனர்.
ஆலோசனைக்கு பின்பு பொதுமக்களுடன் மாநகராட்சிக்கு சென்று மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர், அதன்பின்பு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமியை சந்தித்து அந்தப் பகுதியில் கழிப்பறை கட்ட வேண்டாம் கோவில் உள்ளது மேலும் எதிர் புறம் மதுபான கடை அமைந்துள்ளது.
இதனால் இங்கு கழிப்பறை கட்டப்பட்டால் சட்டவிரோத செயல்கள் தான் நடைபெறும் என்று கூறினார்கள் அப்போது அவர்களிடம் மேயர் ஜெகன் கூறுகையில் அந்த இடம் வேண்டாம் என்றால் மாற்று இடத்தை நீங்களே கூறுங்கள் அந்த இடத்தில் கழிப்பறை கட்ட மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது என்று கூறினார்.
அப்போது அவர்கள் குருஸ்பர்னாந்து சிலை அருகில் உள்ள பகுதியில் அமைக்கலாம் என்றார்கள் அதற்கு மேயர் அந்த பூங்காவிற்குள் மீன்கள் வளர்க்கப்படுகிறது ஆகையால் அங்கு அமைக்க முடியாது காய்கறி மார்க்கெட் அருகில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறை உள்ளது ஆகையால் மக்களின் நல்ல திட்டங்களை எந்தப் பகுதியிலும் நிறுத்த முடியாது.
அதே நேரத்தில் மாநகராட்சி நிர்வாகம் மக்களுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றாது கழிப்பறை என்பது அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளது இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மாற்று இடம் நீங்கள் அளித்தால் அந்த இடத்தை கழிப்பறை கட்ட தயார் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் கூறினார்.