Onetamil News Logo

திருச்செந்தூர் தொகுதியில் ரேசன்கடை இல்லாத அனைத்து பகுதிகளுக்கும் அம்மா நகரும் நியாயவிலைக்கடையை இயக்கிட வேண்டும் ;வட்ட வழங்கல் அலுவலரிடம் இளஞ்சிறுத்தைகள் முறையீடு

Onetamil News
 

திருச்செந்தூர் தொகுதியில் ரேசன்கடை இல்லாத அனைத்து பகுதிகளுக்கும் அம்மா நகரும் நியாயவிலைக்கடையை இயக்கிட வேண்டும் ;வட்ட வழங்கல் அலுவலரிடம் இளஞ்சிறுத்தைகள் முறையீடு


திருச்செந்தூர்  2020 அக்டோபர்  1: திருச்செந்தூர் தொகுதியில் ரேசன்கடை இல்லாத அனைத்து பகுதிகளுக்கும் அம்மா நகரும் நியாயவிலைக்கடையை இயக்கிட வேண்டும் ;வட்ட வழங்கல் அலுவலரிடம் இளஞ்சிறுத்தைகள் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 20.09.2020 அன்று தமிழகம் முழுவதும் 3501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகளை தமிழக முதல்வர் அவர்கள் சென்னையில் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தமாக 84-பகுதிகளுக்கு மட்டுமே நகரும் நியாயவிலைக்கடைகள் மூலம் குடிமைப்பொருட்கள் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மிக குறைவானது. அதிலும் மற்ற தொகுதிகளைக் காட்டிலும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில்  2-பகுதிகளை மட்டுமே தேர்வு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு காந்திபுரம் பகுதியில் 90-குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 300-வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதி மக்கள் 3+3-6கிமீ தூரம் இராணிமகாராஜபுரம் பகுதிக்கு நடந்துசென்று  பொதுவிநியோகத் திட்டப்பொருட்களை வாங்கி வருகின்றனர். பகுதி நேர கடை கேட்டு அப்பகுதி மக்கள் தொடர்ந்து முறையிட்டு வரும் நிலையில் போதிய குடும்ப அட்டை இல்லாததை காரணம் காட்டி பகுதி நேர கடை  மறுக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது அம்மா நகரும் நியாய விலைக்கடையும் காந்திபுரம் பகுதிக்கு இல்லை என்கிற செய்தி அம்மக்களை பெரிதும் ஏமாற்றமடையச்செய்துள்ளது. மக்களின் சிரமத்தைப் போக்கவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் திருச்செந்தூர்  தொகுதிக்கு 2-இடங்கள் என்பது மிகப்பெரும் மோசடியான செயல். எனவே  மேற்குறிப்பிட்ட காந்திபுரம் பகுதிக்கு அம்மா நகரும் நியாய விலைக்கடையை இயக்குவதோடு, திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ரேசன்கடையின்றி நெடுந்தூரம் நடந்து பொருட்கள் வாங்க சிரமப்படும் அனைத்துப் பகுதிகளுக்கும் அம்மா நகரும் நியாய விலைக்கடை வழியே குடிமைப்பொருட்கள் கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் (TSO) இளஞ்சிறுத்தைகள் சார்பில் மனு கொடுத்து முறையிட்டோம்.
வட்ட வழங்கல் அலுவலர்  இம்மனுவை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இப்பணியின்போது முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரகுவரன், இளஞ்சிறுத்தைகளின் மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணி இராவணன், சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் சுரேந்தர், திருச்செந்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo