Onetamil News Logo

 இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை கண்டித்து, ஆலந்தலை மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கருப்பு ரிப்பன் அணிந்து உண்ணாவிரதம் 

Onetamil News
 

 இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை கண்டித்து, ஆலந்தலை மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கருப்பு ரிப்பன் அணிந்து உண்ணாவிரதம் 


திருச்செந்தூர்,2019 ஏப். 23: இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை கண்டித்து, ஆலந்தலை மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கருப்பு ரிப்பன் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை மீனவ கிராமமாகும். இங்குள்ள மக்கள் மீன் பிடி தொழிலை நம்பி உள்ளனர். 200 பைபர் பட குகள் மூலம் 5 ஆயிரம் மீனவர்கள் தொழில் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் உயிர்ப்பு நாளன் று இலங்கையில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் மீது தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 300க்கு மேற்பட்டவர்கள் உயிரி ழந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து ஆலந்தலை மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் கருப்பு ரிப்பன் அணிந்து உண்ணாவிரத போராட்டம் அந்தோணியார் கோயில் அருகே நடந்தது. உண்ணாவிர தத்தில் திரளான பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாலையில் உண்ணாவிரதம் முடிந்ததும், ஆலந்தலை துணை பங்குதந்தை ஜாண்சன் தலைமையில் அற்புத கெபியில் சிறப்பு திருப்பலி நட ந்தது. பின்னர் மாலை 6.30 மணிக்கு ஆலயத்திலிருந்து மெழுகுவர்த் தி ஏந்தி அஞ்சலி ஊர்வலம் ஊரை சுற்றி வலம் வந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo