Onetamil News Logo

திருச்செந்தூரில் தை  அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர்  கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் 

Onetamil News
 

திருச்செந்தூரில் தை  அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர்  கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் 


திருச்செந்தூர் 2020 ஜன 24 ; திருச்செந்தூர் கடற்கறையில் தை  அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர்  கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தை அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அதிகாலை முதலே ஏராளமானோர் குடும்பத்தினருடன் குவிந்து,கடலில் புனித நீராடினர். கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு, அவர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் நடை திறக்கப்பட்டது. பின்னர் விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம்,தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo