Onetamil News Logo

அடைக்கலாபுரம், புனித சூசை அறநிலையம் நடத்தும் பள்ளியில் பிளஸ் 1 படிக்கின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் ;முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி அறிவிப்பு

Onetamil News
 

அடைக்கலாபுரம், புனித சூசை அறநிலையம் நடத்தும் பள்ளியில் பிளஸ் 1 படிக்கின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் ;முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி அறிவிப்பு


அடைக்கலாபுரம் 2020 பிப்ரவரி 22 ;ஜெயலலிதா 72-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி ,இன்று தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரத்தில் புனித சூசை அறநிலைய இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் முதலமைச்சர் ஆற்றிய உரை.
புனித சூசை அறநிலைய பள்ளியினுடைய செயலாளர் ,மற்றும் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய அமைச்சர் கடம்பூர் ராஜூ ,நிகழ்ச்சியிலே பங்கு பெற்று  இருக்கின்ற அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ,டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் , தலைமைச் செயலாளர் ,முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. சண்முகநாதன் ,சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ,நிகழ்ச்சியிலே பங்கு பெற்று சிறப்பித்துக் கொண்டு இருக்கின்ற டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் வேந்தர்  ஏ.சி. சண்முகம் ,ஆகியோர் பங்குபெற்றனர்.
இந்த அறநிலையத்தின் செயலாளர் பங்குதந்தை , எங்களுக்கு அரசின் மூலமாக பள்ளி குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் எல்லாம் கிடைக்கின்றது, சைக்கிள் கூட கிடைக்கின்றது. ஆனால் மடிக்கணினி கிடைக்கவில்லை. ஆகவே, எங்களுடைய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கும், பொது அறிவை பெருக்கி கொள்வதற்கும் வாய்ப்பில்லாத சூழ்நிலை இருக்கின்றது. ஆகவே, அரசின் சார்பாக மடிக்கணினி வழங்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற ஒரு கருத்தை சொன்னார். இந்த இல்லத்திலே படிக்கின்ற தாய் தந்தை இல்லாத இந்த குழந்தைகளுக்கு அம்மாவுடைய அரசு தாய் தந்தையாக இருந்து உங்களுக்கு உற்ற துணையாக இருக்கும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, அதோடு அவர் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற செய்தியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 
பிளஸ் 1 படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வேண்டும் என்று கேட்டிருக்கின்றார். இந்த ஆண்டு முதல்  பிளஸ் 1 படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. வருகின்ற ஜூன் மாதம் தொடங்குகின்ற போது, இந்த புனித சூசை அறநிலையம் நடத்துகின்ற பள்ளியில் பிளஸ் 1 படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அரசின் சார்பாக வழங்கப்படும் என்ற செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதுமட்டுமல்ல, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.சி. சண்முகம் , இந்த பள்ளியிலே படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்குவதற்காக 2 லாரி லோடு அரிசியினை  உங்களுக்கு விலையில்லாமல் வழங்குகின்றார். 
அதோடு அவர் அவருடைய மாவட்டத்திலே 100 தாய் தந்தை இல்லாத குழந்தைகளை வளர்த்து கொண்டிருக்கின்றார். அதோடு நிறைய பேருக்கு அவருடைய கல்லூரியிலே இலவசமாக கல்வி கற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கின்றார். இங்கே படிக்கின்ற குழந்தைகளுக்கு தாய் தந்தை இல்லை என்ற நிலையை போக்கக்கூடிய சூழ்நிலையை எங்களுடைய அரசு  உருவாக்கும். இந்த இல்லத்தை துவக்கி 166 ஆண்டுகள் ஆகிறது என்று குறிப்பிட்டார்கள். முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களும், எங்கள் இயக்கத்தை உருவாக்கிய பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும் வருகை தந்து, கால் பதித்த இடம் இந்த இல்லமாகும். அந்த இடத்தில் நானும் வந்து உங்களோடு சேர்ந்து கலந்துரையாடியதில் உண்மையிலேயே பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவர்கள் எல்லாம் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த தலைவர்கள். அப்படி  நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்த போற்றுதலுக்குரிய தலைவர்கள் இந்த இல்லத்திற்கு வந்து சிறப்பித்திருக்கின்றார்கள். இந்த இல்லம் மேலும் மேலும் வளர்ந்து சேவை புரிய என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo