Onetamil News Logo

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Onetamil News
 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


திருச்செந்தூர்  2019 மே 19 ;திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். 
 
முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்புமிக்கதாகும். திருச்செந்தூர் கோயிலில் இத்திருவிழா, வசந்த விழாவாக கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் கோயிலில் உச்சிகால தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிறைவு நாளை வசந்த திருவிழாவாக கொண்டாடும் விதமாக,சனிக்கிழமை இன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலில் அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. 
காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனையாகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்ந்தார் அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.. அதைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதலும், முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெற்றது.. பின்னர், தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி,தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்ந்தார்.  
வைகாசி விசாக திருவிழாவையொட்டி,லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்தனர்.. ராமநாதபுரம்,மதுரை, அருப்புக்கோட்டை,சாத்தூர், சிவகாசி, நெல்லை,குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதால் கோயிலில் பொது தரிசன வழி,சிறப்பு வழிகளில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா . கண்ணன் ஆதித்தன் இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோயில் பணியாளர் கள செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo