Onetamil News Logo

திருச்செந்தூர் அருகே தொடக்கப்பள்ளியின்  மேற்கூரை இடிந்து விழுந்ததில்  4 மாணவர்கள் காயம் ;கலெக்டர் நேரில் ஆறுதல் 

Onetamil News
 

திருச்செந்தூர் அருகே தொடக்கப்பள்ளியின்  மேற்கூரை இடிந்து விழுந்ததில்  4 மாணவர்கள் காயம் ;கலெக்டர் நேரில் ஆறுதல் 


திருச்செந்தூர்  2019 ஆகஸ்ட் 14 ; திருச்செந்தூர் அருகே பள்ளியின் மேற்கூரை விருந்ததில் 4 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில்  அரசு நிதியுதவி பெறும் ஆர்.சி தொடக்கப்பள்ளி இயங்கிருகிறது. 

கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்ட இந்த பள்ளிக்கூடத்தில் சுமார் 140-க்கும் மேற்றபட்ட மாணவர்கள் பயின்றுவருகிறார்கள். இந்தநிலையில் நேற்று வழக்கம் போல நடைபெற்றுக்கொண்டிருந்த  வேளையில்  கட்டிடத்திலுள்ள  மூன்றாம் வகுப்பின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் படித்துக்கொண்டிருந்த மூன்றாம் வகுப்பு  மாணவர்கள் அக்ஸன் , ஜெயம், ஆண்ட்ரூ, மற்றும் மெர்சிராணி ஆகிய நான்கு மாணவர்கள் தலையில் காயமடைந்தனர்.
  இதனையடுத்து காயமடைந்த  மாணவர்களை மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து  விழுந்த தகவலை தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களை அழைத்துச்சென்றனர். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்த தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி பள்ளிக்கு வந்து பள்ளியின் தரத்தை ஆய்வு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். 
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி புதிய கட்டிடம் இடந்து விழுந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியளிப்பதாகவும். இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் பள்ளி கட்டிடம் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுப்பட்டுள்ளது.
இதில் முறைகேடு செய்யப்பட்து உறுதி செய்யப்பட்டால் இதில் உடன்பட்டவர்கள் மற்றும் பள்ளியை கட்டிய ஒப்பந்தக்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விபத்தினை தொடர்ந்து  பள்ளிக்கு இன்றும் நாளையுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo