Onetamil News Logo

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் 

Onetamil News
 

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் 


திருச்செந்தூர்,  2019 ஆகஸ்ட் 22 ;திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் செவ்வாய்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
காஷ்மீரில் பட்டியலினத்தவர்களை துப்புரவு பணிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலை மாறியுள்ளது இதை நாங்கள் வரேற்கிறோம் என்றார். காஷ்மீர் பிரச்சனையை பட்டியலின தலைவர்கள் மாயாவதி,  ராம்தாஸ் அத்வாலே , ராம்விலாஸ் பாஸ்வான் உட்பட  பலர் வரவேற்றுள்ளனர்.

திருமாவளவன் உட்பட்ட தலைவர்கள் பல்வேறு  அரசியல்  காரணங்களுக்காகவே இதை  எதிர்க்கிறார்கள்.காஷ்மீரில்  370-பிரிவை நீக்கியதன் மூலம் வரலாற்று சிறப்பு மிக்க சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு  பட்டியலினத்தவர்களுக்கு சம உரிமை கிடைக்கப் பெற்றிருக்கிறது.  இந்தியாவில் பட்டியலினத்தவர்களில் பல தலைவர்கள் இருந்திருந்திருக்கிறார்கள் அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம், அனைத்து தலைவர்களையும் அடையாளப்படூத்திட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளோம். தீண்டாமை பிரிவுகளில் கீழ்  பதிவு செய்யப்படும்  வழக்குப்பதிவுகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்குரிய உதவித்தொகை கொடுக்கப்படுகிறது என தெரிவித்த அவர்  அதில் உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு உடனடியாக அரசு வேலை , மற்றும் ஓய்வூதியம் வழங்கிட நடவடிக்கை எடுத்திட  வேண்டும் எனவும் கூறினார்.
பேட்டியின் போது, பா.ஜ.க. மாவட்டத்தலைவர் எம்.பாலாஜி, மாவட்ட செயலர் இரா.சிவமுருகன் ஆதித்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.செந்தில்வேல், ஒன்றியத்தலைவர் ஸ்ரீ கிருஷ்ணகுமார், மாவட்ட மகளிரணி பொதுச்செயலர் கு.நெல்லையம்மாள், மாவட்ட தமிழ்வளர்ச்சிப்பிரிவுத்தலைவர் இரா.கிருஷ்ணன், நகரத்தலைவர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo