Onetamil News Logo

திருச்செந்தூரில் 12ந்தேதி துளஸி கல்யாண உற்சவம் 

Onetamil News
 

திருச்செந்தூரில் 12ந்தேதி துளஸி கல்யாண உற்சவம் 


திருச்செந்தூர்   2019 நவம்பர் 8 ;திருச்செந்தூரில் 12ந்தேதி துளஸி கல்யாண உற்சவம் திருச்செந்தூர் ஹரே கிருஷ்ண அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளையின் தலைவர் . வேத நாராயண தாஸன், முன்னாள் திட்ட மேலாளர் அமெரிக்க மைக்ரோஸாப்ட் நிறுவனம், தலைமையில் நவ 12 ந்தேதி செவ்வாய்க்கிழமை வீரபாகு கல்யாண மஹாலில் மாலை 6 மணிக்கு துளஸி கல்யாண உற்சவம் கொண்டாடப்பட இருக்கிறது. 
துளஸி கல்யாணத்தின் பெருமையை "ப்ருத ஸ்தோத்திர ரத்தினாகரம்" கீழ்கண்டவாறு கூறுகிறது.
"துளஸி கல்யாணத்தில் கலந்துகொள்பவர் தனது இப்பிறவி மற்றும் முற்பிறவிகளின் பாவங்களிலிருந்து விடுபடுகிறார். துளஸி கல்யாணத்தை பார்ப்பவரோ, கேட்பவரோ கூட அதே பலனை அடைகின்றனர்"
 துளஸி பூஜையால் பல யாகங்களையும் விரதங்களையும் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். துளஸி செடி நிற்கின்ற இடத்தில் பூதங்கள்,  பிசாசுகள், ராக்ஷஸர்களின் சேட்டைகளும்,  எமகணங்களின் பயமும், பிரம்மஹத்தி முதலிய தோஷங்களும், கஷ்டங்களும் நீங்கும். 
கல்யாணம் முடியாதவர்களின் ஜாதக குறிப்பை துளஸியின் பாதத்தில் வைத்து பூஜித்து எடுத்து செல்லவும். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் துளஸி கல்யாணத்தில் பங்கு கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 
கல்யாண வைபவத்திற்கு பிறகு 8 மணிக்கு அனைவருக்கும் பிரஸாத அன்னதானம் வழங்கப்படும்.அனைவரும்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் ஹரே கிருஷ்ண அறக்கட்டளை சேவகர்கள் செய்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo