Onetamil News Logo

விவசாயிகள் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்.

Onetamil News
 

விவசாயிகள் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்.


திருச்செந்தூர்,  2019 ஆகஸ்ட் 22 ;திருச்செந்தூர் வட்டார விவசாயிகள் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் பெற பிரதம மந்திரி விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து பயன்பெறும் வேளாண் உதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன்; வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்த செய்திகுறிப்பில் திருச்செந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன்; கூறிப்பிட்டுள்ளதாவது.
: பிரதம மந்திரி விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.3000 பெற்று பயனடையலாம். இத்திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள சிறு,குறு விவசாயிகள் மட்டுமே சேர முடியும். விவசாயிகள் தங்கள் வயதுக்கேற்ப ரூ.55 முதல் ரூ.200 வரை 60 வயது வரை செலுத்த வேண்டும். இத்தொகையினை தங்கள் வசதிக்கேற்ப 1 மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடத்திற்கு ஒருமுறை தங்கள் வங்கி கணக்கு மூலம் (ஆட்டோ டெபிட்) பணம் செலுத்தலாம். 61 வயது முதல் மாதம் தோறும் அவரின் வாழ்நாள் முழுவதும் ரூ.3000 ஓய்வூதியமாக கிடைக்கும். எதிர்பாராத விதமாக பணம் கட்டியவர் இறந்து விட்டால் அவருடைய வாரிசுதாரருக்கு தொடர்ந்து மாதம் ரூ.1500 ஓய்வூதியமாக கிடைக்கும். மேலும் 5 ஆண்டுகளுக்கு பிறகு இத்திட்டத்தில் தொடர விருப்பம் இல்லை என்றால் கட்டிய பணத்தை வட்டியுடன் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். சிறு,குறு விவசாயிகள் தங்கள் பெயரில் நிலம் இருந்தாலும், 40 வயதினை கடந்து விட்டால் தனது குடும்பத்தில் உள்ள மனைவி, மகன் அல்லது மகள் பெயரிலும் இணையலாம். இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் தவிர மற்ற அனைத்து விவசாயிகளும் இணைத்து பயன்பெறலாம். இ;த்திட்டத்தில் இணைய ஆதார் அட்டை, வாரிசுதாரரின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo