Onetamil News Logo

அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கற்றலின் ஒரு பகுதியாக புத்தகம் மற்றும் நாளிதழ் வாசிப்பு பழக்கம் ஏற்படுத்திட நிகழ்வு 

Onetamil News
 

அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கற்றலின் ஒரு பகுதியாக புத்தகம் மற்றும் நாளிதழ் வாசிப்பு பழக்கம் ஏற்படுத்திட நிகழ்வு 


 திருச்செந்தூர் 2019 ஜூலை 19 ; தமிழக அரசு பள்ளி, கல்வித்துறையின் உத்தரவின் பேரில், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கற்றலின் ஒரு பகுதியாக புத்தகம் மற்றும் நாளிதழ் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திடுமாறு அரசு நூலகங்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
இதனடிப்படையில் திருச்செந்தூர் அரசு பொது நூலகம் சார்பில், பயணியர் விடுதி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கற்றலில் இனிமை தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை சி.சிவகாமி தலைமை வகித்தார்.
பணி நிறைவு பெற்ற வங்கி மேலாளர் ஆ.கணேசன், நூலக புரவலர் பொ.மகாவிஷ்ணு, நா.முத்தையாபுரம் பள்ளி மேலாண்மைக்குழு கல்வியாளர் சு.விடுதலைச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தலைவர் ரெ.காமராசு மாணவ, மாணவியருக்கு தினசரி  நாளிதழை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் சு.மாதவன் நன்றி கூறினார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo