Onetamil News Logo

திருச்செந்தூர் கம்பர் சமுதாய சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா -திரளான பக்தர்கள் பங்கேற்பு

Onetamil News
 

திருச்செந்தூர் கம்பர் சமுதாய சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா -திரளான பக்தர்கள் பங்கேற்பு


திருச்செந்தூர்,2019 ஜுலை. 20: திருச்செந்தூர் கம்பர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோயில் கொடை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    திருச்செந்தூர் கம்பர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு சுடலை மாட சுவாமி திருக்கோயில் கொடை விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாலை கடல் தீர்த்தம் எடுத்து வந்து சுவாமி அழைப்பு நிகழ்ச்சியும், இரவு மாக்காப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமையன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 8 மணிக்கு பக்தர்கள்  பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானமும், மாலையில் பெண்கள் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்து, சிறப்பு அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு படைப்பு தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கம்பர் சமுதாய விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo