Onetamil News Logo

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு  தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு மற்றும் அவசரகால வெளியேறும் பயிற்சி 

Onetamil News
 

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு  தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு மற்றும் அவசரகால வெளியேறும் பயிற்சி 


திருச்செந்தூர்,  2020 ஜனவரி 22 ; திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு  தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு மற்றும் அவசரகால வெளியேறும் பயிற்சி வழங்கப்பட்டது.
திருச்செந்தூர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளியில் வைத்து நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் இரா.ஜெகதீஷ் தலைமை வகித்தார். திருச்செந்தூர் நிலைய அலுவலர் ந.நட்டார் ஆனந்தி தலைமையில், தீயணைப்பு வீரர்கள், 108 அவசர ஊர்தி பணியாளர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால், மேற்கொள்ள வேண்டிய அவசர கால நடவடிக்கைள் மற்றும் அவசர கால வெளியேறும் பயிற்சி ஆகியவற்றை செயல் விளக்கமளித்தனர். அப்போது பள்ளி மைதானத்தில் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீயை அணைப்பது, கட்டடத்திலிலிருந்து எவ்வாறு வெளியேறுவது, பள்ளியில் உள்ள மாணவர்கள் குழு உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றவற்றிற்கான ஒத்திகை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி ஒருங்கிணைப்பாளர், உடற்கல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக பள்ளி முதல்வர் இரா.செல்வவைஷ்ணவி வரவேற்புரையாற்றினார். முடிவில் போக்குவரத்து மேலாளர் கிஷோர்பாபு நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo