தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வராது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
திருச்செந்தூர் 2019 ஆகஸ்ட் 14 ; தமிழகத்தில் ஆட்சி கலையும் என திமுக தலைவர் ஸ்டாலினும், கனிமொழியும் காணும் கனவு 2021-ம் ஆண்டிலும் பலிக்காது என தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் தமிழக அரசின் சார்பில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது, கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் பார்வையிட்டனர்.
அதனைதொடர்ந்து செய்தியளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு
நாங்குநேரியில் இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக அரசு தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும், தொகுதி மறுசீரமைப்பு பணிகள் வரையறுக்கப்படவே தாமதமானது என்றார்.
மேலும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக அரசு தயாராக உள்ளது என்றும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் என இரண்டு தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும் எனத் தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும், என்றார்.
மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும், என்றும் இந்த ஆட்சி கலையும் என்றும் நாடாளுமன்ற பிரச்சாரத்தில் இருந்தே ஸ்டாலின் கூறி வருகிறார். கனிமொழியும், ஸ்டாலினும் ஆட்சி கலையும் என காணும் கனவு வரும் 2021 ம் ஆண்டிலும் பலிக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.