Onetamil News Logo

திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Onetamil News
 

திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.


திருச்செந்தூர், மார்ச்.12 ;
 திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் லிங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆல்வின் ரொட்ரிகோ முன்னிலை வகித்தார். 
                                                                                                                                                வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்துக்குட்பட்ட சிங்காரவேலன் குடியிருப்பு மற்றும் மரிய மதலேன் தெருவில் உள்ள வீடுகளுக்கும், தெருக்களுக்கும் குடி நீர் வழங்க வேண்டும். அதேபோல் வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்துக்குட்ட பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் தினசரி குடிநீர் திறந்து விட வேண்டும். குறிஞ்சி நகர், ஜே.ஜே. நகர் ஆகிய இடங்களுக்கு பொன்னன் குறிச்சி  குடிநீர் திட்டத்தின் கீழ் தினசரி குடிதண்ணீர் வழங்க வேண்டம். பி.ஜி. நகர், தேவர் காலனி, கிங் காலனி, சுனாமி நகர் போன்ற இடங்களில் ஆற்று தண்ணீர் பொது குழாய் அமைக்க வேண்டும். வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து பகுதிக்கு எல்லப்பநாயக்கர் குளத்தில் இருந்து குடி தண்ணீர் கொண்டு வரவேண்டும்.
                                                                                                                                                 வீரபாண்டியன்பட்டினத்தில் காயல்பட்டிணம், அடைக்கலாபுரம் சாலைகள் பிரியும் இடத்தில் டி.சி.டபுள்யு தொழிற்சாலை மூலம் உயரமான ஒரு மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கோபுரத்திற்கு உடனடியாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும். மேலும் சிங்காரவேலன் குடியிருப்புக்கு நுழையும் தெருவில் வேப்பமரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முன் அந்த மரத்தை அகற்ற வேண்டும். அதேபோல் அந்த பகுதியில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மின்கம்பங்கள் உள்ளது. அந்த மின்கம்பங்களை சாலையின் ஓரமாக மாற்றி அமைக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது. 
                                                                                                                                                உண்ணாவிரத போராட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட துணை தலைவர்கள் கருப்பசாமி, மைதீன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஒன்றிய தலைவர் சிவலிங்கம், நகர செயலாளர் மாரியப்பன், நகர தலைவர் முருகன், ஆத்தூர் நகர செயலாளர் விக்னேஷ் ராஜா, வீரபாண்டியன்பட்டினம் செந்தில் வீதி தலைவர் வாசுகி, ஜாஸ்லின் பர்னாண்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo