Onetamil News Logo

 திருச்செந்தூர் அருகே காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் மர்மமாக இறந்தார். 

Onetamil News
 

திருச்செந்தூர் அருகே காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் மர்மமாக இறந்தார். 


திருச்செந்தூர்,2019 செப் 9 ;  திருச்செந்தூர் அருகே காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் மர்மமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்தனகுமார்(28). இவர் சென்னை அயனாவரத்தில் உள்ள ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
 இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பூச்சிக்காட்டை சேர்ந்த லிங்கஜோதி(25) என்பவருக்கும் 3 ஆ ண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இது காதல் திருமணமாகும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சந்தனகுமார் பூச்சிக்காடு வந்தார். வந்த இடத்தில் திடீரென்று உடல் நிலை கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவரை திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு முதல் சிகிச்சை அளித்தபின் நெல்லை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். வழியில் அவர் உயிர் பிரிந்தது.  இதுகுறித்து திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo