Onetamil News Logo

திருச்செந்தூர் மாசித்திருவிழா 2ம் நாள் சுவாமி சிங்கக் கேடயச் சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா   

Onetamil News
 

திருச்செந்தூர் மாசித்திருவிழா 2ம் நாள் சுவாமி சிங்கக் கேடயச் சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா   


                                                                                   
 திருச்செந்தூர் 2019 பிப்ரவரி 11 ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா நேற்று சுவாமி சிங்கக் கேடயச் சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்தனர்.
  
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 2&ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் பகலில் சுவாமி குமரவடங்கப்பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லாக்கிலும் எழுந்தருளி தூண்டிகை விநாயகர் கோவிலுக்கு பின்புறமுள்ள ஆழ்வார்திருநகரி தாசில் ஆண்டியப்ப பிள்ளை மண்டபத்திற்கு வந்தனர். பின்னர் அம்பாள் மட்டும் உள் மாடவீதி, வெளி ரதவீதிகளில் உலா வந்து மீண்டும் மண்டபம் வந்து சேர்ந்து--. 
பின்னர் அங்கு மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்ககேடயச் சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து சிவன் கோவில் சேர்ந்தார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo