Onetamil News Logo

திருச்செந்தூரில் உள்ள பிரபல ஹோட்டல் ரமேஷ் அய்யர் மற்றும் ஹோட்டல் அர்ச்சனா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை

Onetamil News
 

திருச்செந்தூரில் உள்ள பிரபல ஹோட்டல் ரமேஷ் அய்யர் மற்றும் ஹோட்டல் அர்ச்சனா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை


திருச்செந்தூர், மார்ச் 13 ;
திருச்செந்தூரில் உள்ள பிரபல ஹோட்டல் ரமேஷ் அய்யர் மற்றும் ஹோட்டல் அர்ச்சனா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினர். 
இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ந்ததாக புகார் கூறப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ஹோட்டல் நிறுவனம் ஒன்றில் வருமான வரி துறையினர் மூன்று நாட்கள் முகாமிட்டு சோதனை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இதனைதொடர்ந்து திருச்செந்தூர் ஹோட்டல் ரமேஷ் அய்யர் மற்றும் ஹோட்டல் அர்ச்சனா ஆகிய நிறுவனங்களில் திடீரென தூத்துக்குடியிலிருந்த காரில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள்  10க்கும் மேற்பட்டவர்கள் இரு பிரிவுகளாக பிரித்து இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்றுமதியம் 12.30 மணிக்கு துவங்கி தொடர்ந்து நடந்தது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கறை கைப்பற்றி வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த திடீர் சோதனையால் திருச்செந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo