Onetamil News Logo

திருச்செந்தூரில் மாணவர்களுக்கு இயற்கை பேரிடர்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்த செயல்விளக்கப் பயிற்சி

Onetamil News
 

திருச்செந்தூரில் மாணவர்களுக்கு இயற்கை பேரிடர்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்த செயல்விளக்கப் பயிற்சி


திருச்செந்தூர் 2019 ஜூன் 13 ; திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை பேரிடர்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
  தமிழக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் திருச்செந்தூர் அரசு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் கடற்கரையோர மாணவர்களுக்கு பேரிடர் காலங்களில் தங்களையும் தங்களது உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சித்துயினர் மாநில பயிற்சியாளர் தாமோதரன் கலந்துகொண்டு  பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்தும்  பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றுவது குறித்தும் மாணவர்களுக்கு செயல் விளக்கப்பயிற்சி அளித்தார்.  மேலும் பேரிடர் குறித்த வருவாய்துறையினர் வெளியிட்ட குறும்படத்தை காண்பித்தும்  பேரிடர் மீட்பு குறித்த பயிற்சியை வழங்கினர்.இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பெற்றனர்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo