Onetamil News Logo

அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் பகுதி மக்களை வங்கிகள், நிதி நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் ;விசிக, தூத்துக்குடி தெற்கு ,மாவட்ட அமைப்பாளர் - இசிஎபா ,சு.விடுதலைச்செழியன் தகவல் 

Onetamil News
 

அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் பகுதி மக்களை வங்கிகள், நிதி நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் ;விசிக, தூத்துக்குடி தெற்கு ,மாவட்ட அமைப்பாளர் - இசிஎபா ,சு.விடுதலைச்செழியன் தகவல் 


தூத்துக்குடி 2020 ஜூலை 11 ;விசிக, தூத்துக்குடி தெற்கு ,மாவட்ட அமைப்பாளர் - இசிஎபா ,சு.விடுதலைச்செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...கொரோனா பாதிப்பு காலத்தில் 6-மாத காலத்திற்கு கடன் தவணைக் கேட்டு மக்களை துன்புறுத்தக்கூடாது என்று அரசு அறிவித்தும், அதை மீறி வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் எளிய மக்கள், பெண்களை தொடர்ந்து அச்சுறுத்தி அபராத வட்டியுடன் சேர்த்து கடன்தவணையை வசூலித்து வருகின்றன. 
நிதிநிறுவனங்களின் இத்தகைய  அத்துமீறலைக் கட்டுப்படுத்தக்கோரி இளஞ்சிறுத்தைகள் சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் நிர்வாகம் இப்பிரச்சனையை அலட்சியமாக பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது.  வேலைவாய்ப்பு முழுமையாக முடங்கியுள்ள நிலையில் மக்கள் மூன்றுவேளை வயிற்றுப்பசியை போக்குவதற்கே அல்லாடுகிற சூழலை அரசு அவசியம் உணர்தல் வேண்டும்.
இந்நிலையில் வாழவைக்கும் வாடிக்கையாளர் நலன்கள் மீது அக்கறையில்லாமல் பணம் வசூலிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும்  வங்கிகள், நிதி நிறுவனங்களின் அராஜகத்தை தடுத்து நிறுத்தி தத்தமது பகுதி மக்களை பாதுகாக்க வேண்டியது மக்கள் மீது அக்கறை கொண்ட பஞ்சாயத்து தலைவர்களின் தலையாய கடமையாகும்.
அதை உறுதிப்படுத்தும் வகையில் ஆழிக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் வங்கிகள், நுண் நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் இப்பணியை  செய்துள்ளது வரவேற்புக்குரியது.
அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் கொரோனா பாதிப்பு காலத்தில் தொழில், வருமானமின்றி வறுமையில் உழலும்  மக்களை பாதுகாத்திட உடனே சிறப்பு கிராம சபையைக் கூட்டி தீர்மானங்கள் இயற்றி  அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இவ்வசூல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென  அவர் கூறியுள்ளார்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo