ஆலந்தலையில் நீர்வள ஆதாரத்துறையின் நிதியின் மூலம் ரூ.52.46 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கப்பட உள்ள பகுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு
தூத்துக்குடி 2020 நவம்பர் 29 ; தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் நிதியின் மூலம் ரூ.52.46 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கப்பட உள்ள பகுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், நேரில் பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் ,தூத்துக்குடி வருகை தந்தபோது திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் நிதியின் மூலம் ரூ.52.46 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதனடிப்படையில் ஆலந்தலை கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தூண்டில் வளைவு அமையவுள்ள இடத்தினை இன்று ஆய்வு செய்யப்பட்டது. தூண்டில் வளைவு அமைக்கும் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது கடல் அரிப்பு பிரச்சனை தீரும் என தெரிவித்தார். ஆய்வின்போது திருச்செந்தூர் கோட்டாட்சியர் (பொ) அபுல்காசிம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் ரகுபதி கணேஷ், வட்டாட்சியர் முருகேசன். மீன்வளத்துறை ஆய்வாளர் சுப்பிரமணியன், ஆலந்தலை பங்குதந்தை ஜெயக்குமார், முக்கிய பிரமுகர் மகிபன், கிராம நல கமிட்டி ஆலந்தலை, ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.