Onetamil News Logo

திருச்செந்தூரில் கொரோனா தொற்று எதிரொலி ;மாவீரர் நகர் பகுதிக்கு சீல் ; தொடர்பில் உள்ள மேலும் 7 பேருக்கு கொரோனா பரிசோதனை 

Onetamil News
 

திருச்செந்தூரில் கொரோனா தொற்று எதிரொலி ;மாவீரர் நகர் பகுதிக்கு சீல் ; தொடர்பில் உள்ள மேலும் 7 பேருக்கு கொரோனா பரிசோதனை 


தூத்துக்குடி 2020 மே 19 ;திருச்செந்தூரில் கொரோனா தொற்று எதிரொலி ;மாவீரர் நகர் பகுதிக்கு சீல் ; தொடர்பில் உள்ள மேலும் 7 பேருக்கு கொரோனா பரிசோதனை போலீசார் தீவிர கண்காணித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் திருச்செந்தூர் மாவீரர்நகரைச் சேர்ந்த 49 வயது கூலிதொழிலாளிக்கு மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 14ம் தேதி மாவீரர்நகரைச் சேர்ந்த அந்த நபர் ரத்த வாந்தி எடுத்ததால் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார். அவருக்கு டி.பி. நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் மேல் சிகிச்சைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் இரு நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருடன் வந்த அவரது மனைவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் திருச்செந்தூர் மாவீரர்நகரை டவுன் பஞ்சாயத்து, வருவாய் மற்றும் சுகாதார துறையினர் மற்றும் போலீசார்  சீல் வைத்தனர். மேலும் யாரும் வெளியே செல்ல கூடாது எனவும் அறிவுறுத்தினர்.
அங்கு மொத்தம் 84 வீடுகளில் 48 குடும்பத்தைச் சேர்ந்த 189 பேர் வசித்து வருகின்றனர். இதில் 64 வீடுகள் திருச்செந்தூர் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்டும் மீதமுள்ள 20 வீடுகள் ஆறுமுகநேரி டவுன் பஞ்சாயத்திற்குட்பட்டதாகும். தற்போது அங்கு வசிக்கும் பெரியவர்கள், சிறியவர்கள், கர்ப்பணிகள் ஆகியோரை பொது சுகாதார துறையினர் கணக்கெடுத்து அவர்களிடம் காய்ச்சல், இருமல் உள்ளதா என ஆய்வு செய்தனர். இதில் அவரோடு தொடர்பில் இருந்த 5 பேரும், ஒரு கர்ப்பணி மற்றும் குழந்தை ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே மாவீரர்நகரில் கொரோனா தொற்று இருப்பதாக பரவிய தகவலால் அந்த பகுதிக்கு கடந்த இரு நாட்களாக யாரும் அத்தியாவசிய பொருட்களை வழங்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பகுதியில் அந்த சீல் வைக்கப்பட்டதால் உணவு மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் யாருடன் தொடர்பில் இருந்தார். எங்கெல்லாம் சென்றுவந்தார் என்பது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கண்டறிந்து வருகின்றனர். கடந்த 8ம் தேதி திருச்செந்தூர்  பாளையங்கோட்டை ரோட்டில் டாஸ்மாக் கடைக்கு வந்து சென்றதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனால் அந்த நபர் சென்ற வந்த பகுதிகளையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தி வருகின்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo