Onetamil News Logo

வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களுக்கு டிசிடபிள்யூ சார்பில் மருத்துவ முதலுதவி சிகிச்சை

Onetamil News
 

வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களுக்கு டிசிடபிள்யூ சார்பில் மருத்துவ முதலுதவி சிகிச்சை


திருச்செந்தூர்  2019 மே 19 ;வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் மருத்துவ முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்டது. 
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக சென்றனர். வெகு தூரங்களில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு தசைவலி, கால்வீக்கம் உள்ளிட்ட பல்வேறுஉடல் உபாதைகளுக்கு டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் சாகுபுரத்தில் முதலுதவி மருத்துவ மையம் அமைத்து முதலுதவி அளிக்கப்பட்டது.  
இதே போல் பக்தர்களுக்கு மோர் சுக்கு காபி மற்றும் மிக்சர் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் டிசிடபிள்யூ நிறுவன செயல்உதவித் தலைவர் பணியகம் ஜெயக்குமார் கலந்து கொண்டுமுகாமை தொடங்கி வைத்தார். டிசிடபிள்யூ நிறுவன மருத்துவ அதிகாரி சண்முகம் நெல்லையப்பன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பாதயாத்திரை பக்தர்களுக்கு சிகிச்சைஅளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் மக்கள் தொடர்பு துறையினர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo