Onetamil News Logo

திருச்செந்தூர் வட்டார விவசாயிகள் நெல் இயந்திர நடவு செய்து அரசு மானியம் பெற வேளாண்மை உதவி இயக்குநர் வேண்டுகோள்

Onetamil News
 

திருச்செந்தூர் வட்டார விவசாயிகள் நெல் இயந்திர நடவு செய்து அரசு மானியம் பெற வேளாண்மை உதவி இயக்குநர் வேண்டுகோள்


திருச்செந்தூர்   2019 நவம்பர் 8 ;திருச்செந்தூர் வட்டார விவசாயிகள் நெல் இயந்திர நடவு செய்து அரசு மானியம் பெற வேளாண்மை உதவி இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடசுப்ரமணியன் தெரிவித்துள்ளதாவது: திருச்செந்தூர் வட்டாரத்தில் பிசானம் மற்றும் நவரை கோடை பருவங்களில் சுமார் 1250 எக்டர் வரை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது தற்போது நிலவிவரும் சூழ்நிலையில் நெல் நடவு செய்ய வேலையாட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மேலும் ஆட்களின் சம்பளமும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நெல் பயிர் சாகுபடி செலவும் இருமடங்காகிறது. எனவே செலவை குறைக்கும் வகையில் தற்போது நெல் இயந்திர நடவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு சில விவசாயிகள் தற்போது இயந்திர நடவு மேற்கொண்டு வருகின்றனர். 
ஒரு எக்டர் நடவு செய்வதற்கு 2.5 சென்ட் அளவு பாய் நாற்றங்கால் அமைத்தால் போதுமானது. பாய் நாற்றங்காலில் விதைத்த 12 முதல் 15 நாள்; வயது கொண்ட நாற்றுகளை நடவு வயலில் இயந்திரம் மூலம் நடவு செய்திட வேண்டும். இவ்வாறு இயந்திர நடவு செய்வதால் குறைந்த நேரத்தில் அதிக பரப்பு நடவு செய்யலாம். கை நடவு செய்வதால் ஏற்படும் செலவை விட இயந்திர நடவு செய்யும் போது செலவு வெகுவாக குறைகிறது. மேலும் இயந்திர நடவு மூலம் வீரியமான நெல் நாற்றுக்கள், சீரான பயிர் இடைவெளி, உறுதியான பயிர் எண்ணிக்கை, அதிகமான தூர் பிடிப்பு, சீரான முதிர்ச்சி பெற்று அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. 
மேலும் அனைத்து விவசாயிகளும் சாகுபடி செலவை குறைத்திடும் பொருட்டு நெல் இயந்திர நடவு தொழில்நுட்பத்தினை பயன்படுத்திட ஏதுவாக தற்போது வேளாண்மைத் துறையில் ஒரு எக்டருக்கு ரூ.5000 நடவு மானியமாக இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட மானியத்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 
எனவே இயந்திரநடவு செய்து மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை தங்கள் பகுதி வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவலர் மற்றும் உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இயந்திர நடவு செய்து அரசு மானியம் பெறுவதோடு மட்டுமல்லாமல் சாகுபடி செலவையும் குறைத்து அதிக இலாபம் அடைய திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடசுப்ரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo