Onetamil News Logo

தமிழகத்திலோ தி.மு.க. நடத்தும் கல்விக்கூடங்களில் இந்தியை பயிற்று வித்து விட்டு, நம்மை படிக்க விடாமல் தடுக்கின்றனர் ;ஹெச்.ராஜா பேச்சு

Onetamil News
 

தமிழகத்திலோ தி.மு.க. நடத்தும் கல்விக்கூடங்களில் இந்தியை பயிற்று வித்து விட்டு, நம்மை படிக்க விடாமல் தடுக்கின்றனர் ;ஹெச்.ராஜா பேச்சு


திருச்செந்தூர் 2019 ஜுலை .9 ;தமிழகத்திலோ தி.மு.க. நடத்தும் கல்விக்கூடங்களில் இந்தியை பயிற்று வித்து விட்டு, நம்மை படிக்க விடாமல் தடுக்கின்றனர்.   என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் ெஹச்.ராஜா பேசினார்.
திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. சார்பில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் திங்கட்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் வி.நாராயணராஜ் தலைமை வகித்தார். மாவட்ட சிறுபான்மை பிரிவுத்தலைவர் டி.செல்வராஜ், நகர சிறுபான்மை அணி தலைவர் பா.ஜெரால்டு, நகர மீனவரணி தலைவர் பா.நெப்போலியன், துணைத்தலைவர் பி.ஜென்கர், நகர மகளிரணி தலைவர் டி.ரெனில்டா, மீனவரணி கௌதம, மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பா.ஜ.க. தேசியச்செயலர் ஹெச்.ராஜா பேசியதாவது,
   உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தாய்மொழி, ஆங்கில மொழி தவிர மூன்றாவதாக விருப்ப மொழியை கற்றுக்கொள்ள அனுமதித்துள்ளது. அங்கு இந்தி படித்த தமிழாசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் தமிழகத்திலோ தி.மு.க. நடத்தும் கல்விக்கூடங்களில் இந்தியை பயிற்று வித்து விட்டு, நம்மை படிக்க விடாமல் தடுக்கின்றனர்.  பா.ஜ.க. ஒரு போதும் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஏற்கனவே உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை தொடாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய முற்பட்ட வகுப்பினராக தமிழகத்தில் 20 சதவீதம் உள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டையே நாங்கள் வலியுறுத்திகிறோம்.

எல்லா கல்லூரிகளிலும் ஏற்கனவே உள்ள இடங்களில் 25 சதவீதம் அதிகரித்துவிட்டு, அதில் தான் 10 சதவீதத்தை பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளியவர்களுக்கு வழங்குமாறு சட்டம் கூறுகிறது. ஊடகங்கள் உண்மையை கூற மறுக்கின்றன. அவைகள் விவாதம் என்ற பெயரில் பா.ஜ.க. செய்த திட்டங்களை மறைத்து, தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இது ஊடக பயங்கரவாதமாகும். எனவே தான் பா.ஜ.க. சார்பில் யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என முடிவெடுத்துள்ளோம். நாமே மக்களை நேரடியாக சந்தித்து பா.ஜ.க. அரசு செய்த நல்ல திட்டங்களை எடுத்துரைப்போம்.
தூத்துக்குடி, மத்திய சென்னை, சிவகங்கை, நீலகிரியில் விரைவில் இடைத்தேர்தல் வருவது உறுதி. ஊழல் ராணி, ஊழல் ராஜாக்கள் இடைத்தேர்தலில் வீட்டிற்கு அனுப்ப பட உள்ளார்கள். வைகோ, சீமான், திருமுருகன்காந்தி, திருமாவளவன் உள்ளிட்டோர் விரைவில் தேச விரோத சட்டத்தில் சிறைக்கு செல்ல உள்ளதாhக சமூக ஊடகங்களில் பட்டியலிப்பட்டுள்ளது. பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் போல பொம்மையாக இருப்பவரல்ல. தேச விரோத சக்திகள் இனி வரும் காலங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
    தொடர்ந்து கூட்டத்தில் திருச்செந்தூர் அமலிநகர், 5-வது வார்டு தி.மு.க. மற்றும் 13-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு தேசியச்செயலர் ஹெச்.ராஜா கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். கூட்டத்தில் பா.ஜ.க. மாவட்டத்தலைவர் எம்.பாலாஜி, மாவட்ட செயலர் இரா.சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட ஓபிசி அணி பொதுச்செயலர் இ.தங்கபாண்டி, மாவட்ட மகளிரணி பொதுச்செயலர் கு.நெல்லையம்மாள், மாவட்ட தமிழ் வளர்ச்சிப்பிரிவுத் தலைவர் இரா.கிருஷ்ணன், காயல்பட்டணம் நகரத்தலைவர் பண்டாரம்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகரத்தலைவர் சரவணன் வரவேற்புரையாற்றினார். முடிவில் திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் ஸ்ரீ கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo