Onetamil News Logo

வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை பயிற்சி உதவி கலெக்டர் அணு தொடங்கி வைத்தார்.

Onetamil News
 

வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை பயிற்சி உதவி கலெக்டர் அணு தொடங்கி வைத்தார்.


திருச்செந்தூர்,2018  செப்.13 ; திருச்செந்தூரில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை பயிற்சி உதவி கலெக்டர் அணு தொடங்கி வைத்தார்.
 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் கடந்த 1&ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(அக்டோபர்) 31&ந் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் வருகிற 23&ந் தேதி, அடுத்த மாதம் 7 மற்றும் 14&ந் தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதையடுத்து நேற்று திருச்செந்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு மணி சங்கலி மற்றும் பேரணி நடைபெற்றது. பேரணி, வ.உ.சி. திடலில் தொடங்கி வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி, தெற்கு ரதவீதி மற்றும் மேல ரதவீதி வழியாக மீண்டும் வ.உ.சி. திடலில் நிறைவு பெற்றது. பேரணியை பயிற்சி உதவி கலெக்டர் அணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தேசிய தரைப்படை மற்றும் கப்பல் படை மாணவர்கள், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சாலை பாதுகாப்பு படை மாணவிகள் கலந்து கொண்டு வாக்காளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி வாக்காளர் விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பியவாரு பேரணியாக வந்தனர்.
 நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, தாசில்தார் தில்லைபாண்டி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ரதிகலா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி, போக்குவரத்து சப்&இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஆதித்தனார் கல்லூரி தேசிய தரைபடை லெப்டிணன்ட் சிவமுருகன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சாந்தா, சாலை பாதுகாப்பு படை அலுவலர் ஜான்சிராணி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo