Onetamil News Logo

சமையல் செய்து கொண்டு இருந்த போது தீ விபத்தில் பலியான ரஞ்சனி 

Onetamil News
 

சமையல் செய்து கொண்டு இருந்த போது தீ விபத்தில் பலியான ரஞ்சனி   


                              

திருச்செந்தூர்,  2019 ஜூன் 10 ; திருச்செந்தூர் அருகே காயாமொழியில் சமையல் செய்த போது சேலையில் தீப்பற்றியதில் இளம் பெண் பலியானார். காப்பாற்ற சென்ற கணவனும் படுகாயத்தடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி வள்ளுவன் நகரை சேர்ந்த விஸ்வநாதன் (34), இவரது மனைவி ரஞ்சனி (26). இவர்களுக்கு மகாஸ்ரீ (7) என்ற மகளும், லோகித்செல்வன் (4) என்ற மகனும் உள்ளனர். விஸ்வநாதன் டிவி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சமையல் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக ரஞ்சனி சேலையில் தீப்பற்றியது, இவரது கூக்குரலை கேட்ட கணவர் ஓடி வந்து காப்பாற்ற முயன்ற போது இருவரும் பலத்த தீக்காயமடைந்தனர். தீக்காயமடைந்த இருவரையும்; திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ரஞ்சனி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விஸ்வநாதன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo