Onetamil News Logo

திருச்செந்தூர் ஆறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் பஞ்சாயத்து போர்டு குடிதண்ணீர் வழங்குவதில் அலட்சியம் 

Onetamil News
 

திருச்செந்தூர் ஆறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் பஞ்சாயத்து போர்டு குடிதண்ணீர் வழங்குவதில் அலட்சியம் 


திருச்செந்தூர் 2020 மே 29  ;. திருச்செந்தூர் பஞ்சாயத்து போர்டு வார்க்கு உட்பட்டது 21 வார்டு . இந்த வார்க்கு உட்பட்ட மக்களுக்கு குடிதண்ணீர் போதிய அளவு வழங்குவது கிடையாது. ஒருசில வார்டுகளில் குடிதண்ணீர் குழாய் உடைந்தும் சரியான நேரத்திற்கு தண்ணீர் குழாய் திறந்தும், அடைக்கப்படாமல் விடுவதால் குடிதண்ணீர் சாக்கடைகளில் கலந்தும் சாலைகளில் வீணாகி போகிறது. முத்தாரம்மன் கோவில் பின்புறம் உள்ள தண்ணீர் டேங்கில் தண்ணீர் ஏற்றப்படவில்லை. தகவல் பலகையில் 15/5/2020ம் தேதியன்று தண்ணீர் திறக்கப்பட்டது என்று எழுதப்பட்டது. மைலப்புரம் தெரு பிள்ளையார் கோவில் பின்புறம் உள்ள தண்ணீர் டேங்கில் 17/5/2020ல் திறக்க ப்பட்டது என்று தகவல் பலகையில்  எழுதப்பட்டது.மக்கள் சைக்கிளிலும் இருசக்கர வாகனங்களிலும்  பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் குடிதண்ணீர் எடுத்து வருகிறார்கள். தண்ணீர் வரக்கூடிய குழாயில் பாசிப்பிடித்து இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன்மேல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு சரி செய்ய வேண்டும். பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo