Onetamil News Logo

ஆதார் மற்றம் ரேஷன் கார்டுகளை திருப்பி ஒப்படைப்பதாக திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கோவில் வளாக சிறு வியாபாரிகள்..

Onetamil News
 

ஆதார் மற்றம் ரேஷன் கார்டுகளை திருப்பி ஒப்படைப்பதாக திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கோவில் வளாக சிறு வியாபாரிகள்..


திருச்செந்தூர், மே, 17 ; திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்யபவர்களிடம் வாடகை வசூலிக்கும் உரிமையை தனியாரிடம் ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்து வந்த சுமார் 400க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை திருப்பி ஒப்படைக்கும் போராட்டம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் பல்வேறு தொழில்கள் செய்யும் சிறு வியாபாரிகள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் கோவில் பகுதியில் சுண்டல், பூ மற்றும் பலகாரங்கள் விற்பனை செய்தும், சுற்றுலா பயணிகள் பக்தர்களிடம் போட்டோ எடுத்தும் தொழில் புரிந்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து தொழில் வரியாக தினசரி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வியாபாரிகளிடம் தொழில் வரி கட்டணம் வசூலிக்கும் உரிமையை தனியாரிடம் குத்தகைக்கு விட முடிவு செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் பகுதி சிறு வியாபாரிகள் சிறு தொழில் செய்து அன்றாடம் காய்ச்சியாக பிழைப்பு நடத்தி வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் என்றும் இதனால் தனியாரிடம் வரி வசூலிக்கும் உரிமையை குத்தகை விட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனை திருக்கோவில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் குத்தகையை ஏலம் விடுவதில் தீவிரம் காட்டி ஏலம் விட அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை கண்டித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் தங்கள் குடும்பத்தினர்களுடன் திரண்டு வந்து ஆதார் கார்டுகளையும், ரேஷன் கார்டுகளையும் அரசிடம் திருப்பி ஒப்படைக்க போவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை திருச்செந்தூர் ஆர்டிஓ தங்கவேலு அழைத்து பேசினார், தொடர்ந்து திருக்கோவில் நிர்வாகத்திடம் பேசி இதற்கு சுமூகமான நல்ல முடிவையும் பெற்று தருவதாக உறுதியளித்தார். இதனைத்தொடாந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் போது நடந்த பேச்சு வார்த்தையில் தாசில்தார் தில்லைப்பாண்டி, மண்டல துணை தாசில்தார் கோமதிசங்கர், பாஜக மநில செயற்குழு உறுப்பினர் செந்தில்வேல், மகளிரணி மாவட்ட பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ஜெயசிங், நகர தலைவர் அரிகிருஷ்ணன், நகர பொது செயலாளர் முத்துராஜ், நகர பொருளாளர் மணி மற்றும் திருக்கோவில் வளாக சிறு வியாபாரிகள் கலந்து கொண்டனர். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo