Onetamil News Logo

அண்ணனுடன் ரோட்டில் வாக்கிங் சென்ற தம்பி மீது  பைக் மோதி தம்பி பலி அண்ணண் படுகாயம்

Onetamil News
 

அண்ணனுடன் ரோட்டில் வாக்கிங் சென்ற தம்பி மீது  பைக் மோதி தம்பி பலி அண்ணண் படுகாயம் 


திருச்செந்தூர், 2018 ஜூலை 11 ; நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பொன்மாநகரைச்சேர்ந்தவர் சுடலை(56). இவர் பாபநாசம் அருகே உள்ள கீழாம்பூர் கால்நடை மருத்துவமனையில் மருந்தாளுனராக வேலைபார்த்து வந்தார். இவரது அண்ணன் ஜக்கையா(62). இவர் மாஞ்சோலை நாலுமுக்கு எஸ்டேட்டில் பணியாற்றி வந்தார். ஜக்கையா மூத்த மகள் காயத்ரி(35), 2வது மகள் தாரணி(28). இவர்கள் இருவரையும் ஜக்கையா தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதில் 2வது மகள் தாரிணிக்கு வளைகாப்பு 8ம்தேதி கல்லிடைக்குறிச்சியில் வைத்து நடந்தது. பின்னர் ஆறுமுகநேரியில் உள்ள காய்த்ரி வீட்டில் கொண்டு போய்விட்டனர். அன்றிரவு ஜக்கையா, சுடலை இருவரும் அடைக்கலாபுரம் ரோட்டில் வாக்கிங் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த பைக் மோதியது. இதில் அண்ணன், தம்பி காயமடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு நேற்று முன்தினம் இரவு சுடலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், விசாரித்து வருகிறார். இறந்த சுடலைக்கு செல்வி(50) என்ற மனைவி, பிரேம்குமார் என்ற மகன், உமாமகேஸ்வரி என்ற மகள் உள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo