Onetamil News Logo

டாக்டர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற டாக்டர் 

Onetamil News
 

டாக்டர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற டாக்டர் 



திருச்செந்தூர், ஜன. 9 ;
சென்னையில் வசிக்கும் டாக்டர் ஒருவர்,  அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது சொந்த கிராமத்தில் மாதந்தோறும் ஒரு நாள் இலவச மருத்துவ சிகிச்சை அளித்து மற்ற டாக்டர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். 
                                                                                                                                  சேவை என்பது வெறும் வார்த்தையாக இல்லாமல் உண்மையிலேயே அர்த்தம் கற்பித்து வருகிறார் 74வயதான திருச்செந்தூரைச் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர். இன்றைய காலகட்டத்தில் மருத்துவம் என்பது பெரும் வியாபாரமாகி வரும் நிலையில் அரசு டாக்டர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் சொந்த கிராமத்தில் இலவச மருத்துவம் பார்ப்பதோடு மருந்து மாத்திரைகளை வழங்கி பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளார் இந்த டாக்டர். 
                                                                                                                   திருச்செந்தூரிலிருந்து 13 கி.மீ., தொலைவில் உள்ள சிறிய கிராமம் நாதன்கிணறு. பெரும்பாலும் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையில் தான் வணிகம் செய்து வருகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது சொந்த கிராமத்திற்கும் போவதும் வழக்கம். இந்த கிராமத்தைச் சேர்ந்த துரைரசாமி, பால்கனி ஆகியோரின் மகன் டாக்டர் முருகேசன். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். இங்கு படித்துமுடித்துவிட்டு டாக்டராகி சென்னை பல்லாவரத்தில் குடும்பத்தோடு செட்டிலாவிட்டார். சென்னை எக்மோரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சீனியர் டாக்டராக பணிபுரிந்தவர். 32 ஆண்டுகள் மருத்துவ சேவைக்கு பிறகு கடந்த 2001ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றவர். சென்னையில் வசிக்கும் இவர்களது சகாதரர்கள் குமாரவேலு, சந்திரசேகரன் ஆகியோரோடு அவ்வப்போது சொந்த கிராமத்திற்கு வந்து செல்வது உண்டு. அந்த சமயங்களில் இவரிடம் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சை பெற்று செல்வதுண்டு. அந்த சமயத்தில் சொந்த கிராம மக்களுக்காக மாதத்தில் ஒரு நாள் இலவச மருத்துவம் செய்யலாம் என சகோதரர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.                                                                                                                                                       குடும்பத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்போடு கடந்த 2015ம் ஆண்டு முதல் இலவச மருத்தவ சேவையை துவங்கியுள்ளார். தங்களது தந்தை துரைசாமி, தாய் பால்கனி பெயரில் அறக்கட்டளை துவங்கி அதன்மூலம் மருத்துவ சேவையை துவங்கியுள்ளார். ஆரம்பத்தில் சொற்ப நபர்களே மருத்துவ சிகிச்சை பெற்றனர். இலவசம் மருத்துவம் பார்ப்பதோடு, அவர்களுக்கு தேவையான மருத்து மாத்திரைக¬யும் இலவசமாக கொடுத்து உதவினார். இத்தகவல் பக்கத்து கிராமங்களுக்கு பரவ மாதத்திற்கு மாதம் மருத்துவ பரிசோதனைக்காக வருபவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் அதிகரித்தது. வெறும் மருத்துவ பரிசோதனையோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை சிகிச்சை அளித்து அனைவரையும் ஆச்சரியபட வைத்து வருகிறார். 
                                                                                                                                  மருத்துவ துறையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இதுவரை தொடர்ந்து 27 மாதங்கள் இலவச மருத்துவ முகாமை நடத்தி முடித்துள்ளார். ஒவ்வொரு முறையும் சுமார் 200 பேருக்கு அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தொடர்ந்து அவரது மருத்துவ சேவை குறித்து கேட்டதற்கு அவரே நம்மிடம் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக பேசினார். அவர் கூறிய தகவல் நம்மை ஆச்சரியபட வைத்தது. 
                                                                                                                              சென்னையில் பணி ஒய்வுக்கு பிறகு எனது சொந்த கிராமமான நாதன்கிணறுக்கு குடும்பத்தோடு வருவோம். அப்போது இங்கு உள்ளவர்கள் உறவுமுறையை கூப்பிட்டு மருத்துவ ஆலோசனை கேட்டனர். அப்போது தான் மாதத்திற்கு ஒரு நாள் ஊருக்கு வரும் போது இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கலாம் என்று எண்ணம் வந்தது. இதற்கு எனது சகோதரர்களும் உறுதுணையாக இருந்தனர். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம். ஒவ்வொரு மாதமும் பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற வருகிறார்கள். கடந்த நவம்பர் மாதம் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையோடு இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினோம். அதில் கலந்து கொண்டு 360 பேர்களில் 154 பேருக்கு கண் பரிசோதனை செய்து இலவச கண்ணாடி வழங்கினோம். 33 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சையும் நடந்தது. அதே போல் நாசரேத் சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கு சுமார் ரூ.2.50 லட்சம் செலவில் இதய அறுவை சிசிச்சை செய்துள்ளோம். சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த 3வயது சிறுவனுக்கு சிறுநீரக அடைப்பை  சிகிச்சை மூலம் சரி செய்து இருக்கிறோம் என என்றார். இதோடு நிற்காமல் வரும் மார்ச் மாதத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார். காமராஜர் காலத்தில் மருத்துவத்தை இலவசமாக படித்தேன். அதனால் யாரிடமம் எந்த உதவியும் கேட்பதில்லை. முடிந்தவரை சொந்தமாக செய்ய முயற்சிக்கிறோம். இப்போது மருத்துவம் படிப்பதற்கு தனியார்களிடம் கோடி ரூபாய்க்கு செலவு செய்கின்றனர். அதனால் தான் மருத்துவம் வியாபாரமாகி வருகிறது என வேதனையோடு குறிப்பிட்டார். மருத்துவர் முருகேசனை போன்று ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மருத்துவர் வரவேண்டும் சிகிச்சையளிக்க வரவேண்டும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் டாக்டர் முருகேசனை இப்பகுதி மக்கள் மனபூர்வமாக வாழ்த்துகின்றனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo