Onetamil News Logo

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு பூஜை காலங்கள் மாற்றம்  

Onetamil News
 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு பூஜை காலங்கள் மாற்றம்    


திருச்செந்தூர், 2019 ஜூலை 12 ;  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் இணை ஆணையர் குமரதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இவ்வாண்டில் சந்திரகிரகணம் வருகிற 16 தேதி நள்ளிரவு 1.37 மணி முதல் 17-ஆம் தேதி அதிகாலை 4.29 மணி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து கோவில் பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளது.
அதாவது 16ஆம் தேதி இரவு 9.30 மணிக்குள் பள்ளியறை பூஜை ஆகி நடை சாத்தப்படுகிறது. பின்னர் மீண்டும் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை யாகி சுவாமிக்கு பட்டு சாத்தி வைக்கப் படுகிறது. மறுதினம் 17ஆம் தேதி அதிகாலை 5 30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு  உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என கோவில் இணை ஆணையர் குமரதுரை தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo