Onetamil News Logo

பன்றி திருட முயன்ற 6பேர் கும்பல் கைது: கார் பறிமுதல்

Onetamil News
 

பன்றி திருட முயன்ற 6பேர் கும்பல் கைது: கார் பறிமுதல்


திருச்செந்தூர்  2019 ஆகஸ்ட் 14 ; திருச்செந்தூரில் காரில் பன்றிகளை கடத்த முயன்றதாக 6பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 திருச்செந்தூர் ஆலந்தலை சுனாமி நகரைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் பரமசிவன் (36), இவர் அப்பகுதியில் பன்றிப் பண்ணை நடத்தி வருகிறார்.  இவரது 2பன்றிகளை காரில் வந்த 6பேர் கும்பல் கடத்த முயன்றுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அவர்களை மடக்கிப்பிடித்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் விசாரணை நடத்தினார். 
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கணேசராஜா (36), நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானைச் சேர்ந்த மாடசாமி மகன் தங்கராஜ் (30), கருப்பசாமி மகன் கதிரேசன் (30), செல்லையா மகன் நயினார் (45), அண்ணாத்துரை மகன் மாரியப்பன் (26),கைலாசபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி மகன் லெட்சுமணன் (33) எனத் தெரியவந்தது. பன்றி திருட முயன்றதாக 6பேர் மீது வழக்குப் பதிந்து, போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo